சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மக்களே.. இதையெல்லாம் செய்ய கூடாது.. வார்னிங்! அதி தீவிர புயலாக கரையை கடக்கிறது மாண்டஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மண்டாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை மற்றும் சூறாவளி காற்று வீசும் என்பதால் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. பருவமழை தொடங்கியதும் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.

தொடக்கத்திலேயே நல்ல மழை பெய்தாலும் அடுத்தடுத்த நாட்களில் மழை குறைந்துவிட்டது. குறிப்பாக நவம்பர் பிற்பகுதியில் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவியது.

மாண்டஸ் புயல்..ரெட் அலர்ட்.. தலைமைச் செயலர் அவசர ஆலோசனை..பறந்த உத்தரவு மாண்டஸ் புயல்..ரெட் அலர்ட்.. தலைமைச் செயலர் அவசர ஆலோசனை..பறந்த உத்தரவு

உருவானது மாண்டஸ் புயல்

உருவானது மாண்டஸ் புயல்

கடுமையான பனிப்பொழிவும் இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த சூழலில் கடந்த 5 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது. அதைப்போலவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதையடுத்து நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது.

கன முதல் மிக கனமழை

கன முதல் மிக கனமழை

சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் இந்த புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையை கடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று வீசக்கூடும்

சூறாவளி காற்று வீசக்கூடும்

புயல் காரணமாக நல்ல மழை பெய்வதுடன் கரையை கடக்கும் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இரவில் இருந்து மறுநாள் வரை புயல் கரையை கடக்கக் கூடிய அந்த குறிப்பிட்ட நேரத்தில் 90 கி.மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கூடாரங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும்

கூடாரங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும்

இதனிடையே, புயல் காரணமாக மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

* தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் நிற்பதை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
* மாண்டஸ் புயல் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
* பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உதவி எண்கள் அறிவிப்பு

உதவி எண்கள் அறிவிப்பு

* பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள

* காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
* சென்னை மக்கள் அவசர தேவைக்கான உதவி எண்கள் - 1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205.

English summary
Cyclone Mandas is predicted to make landfall between Sriharikota and Mamallapuram in Andhra Pradesh as Cyclone Mandas has strengthened into a very severe cyclonic storm. The Chennai Corporation has issued a warning of heavy rains and cyclonic winds to follow during the storm's landfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X