10,11,12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஹால்- டிக்கெட் ரிலீஸ்... முழு விபரம்
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறகிறது. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.

பொதுத்தேர்வுகள் எப்போது
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் 10 ஆம் வகுப்பில் 9,55,474 பேரும், 11 ஆம் வகுப்பில் 8,83,884 பேரும் 12 ஆம் வகுப்பில் 8,37,317 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் பொதுத்தேர்வுவானது ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட்
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை எப்போது
தேர்வுகள் முடிந்த பின்னர் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதி தேர்வு நடத்தபடவுள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications