2 நாட்களுக்கு கனமழை..7மாவட்ட மக்களுக்கும் குடை அவசியம் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
4ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended Video

    நேற்றிரவு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பெய்த மழை.. குளம் போல் தேங்கி நின்ற நீர் - வீடியோ

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் சில ஊர்களில் ஜில்லென மழை பெய்து வருகிறது.
    கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் 5 செமீ மழையும் வால்பாறை, அம்மூரில் தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

    தேவாலா, திருவாலங்காடு,சோலையார், திருவள்ளூர் , மகாபலிபுரம், சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணி, அரக்கோணம், பூண்டி, ஆவடி,வால்பாறை தாலுக்கா அலுவலகம், வாலாஜாஹ்,தாம்பரம் , மேல் பவானி, மதுராந்தகம் , அவலாஞ்சியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

    2 நாட்களுக்கு கனமழை

    2 நாட்களுக்கு கனமழை

    இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இன்று வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இடி மின்னலுடன் கனமழை

    இடி மின்னலுடன் கனமழை

    நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கனமழை பெய்யும்

    கனமழை பெய்யும்

    நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் மழை

    சென்னையில் மழை

    சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    இன்று முதல் ஜூலை 4ஆம் தேதி வரைக்கும் இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 2ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+