5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நீடாமங்கலம், வேதாரண்யம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கீழச்செருவாய், ஜெயம்கொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், அதிராம்பட்டினம், வெட்டிகாடு ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மன்னார்குடி, மணல்மேடு, செங்கம், திருச்செங்கோடு, அகரம் சீகூர் ஸ்ரீமுஷ்ணம், முகையூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. போளூர், மஞ்சளாறு, வானூர், பட்டுக்கோட்டை, நெய்வாசல் தென்பாதி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அம்முண்டி, தஞ்சாவூர், பெரம்பூர், திருவிடைமருதூர், வலங்கைமான், தண்டராம்பேட்டை, கொடவாசல், திருவண்ணாமலை, சென்னை நுங்கம்பாக்கம், தொழுதூர், மதுக்கூர், மூங்கில்துறைப்பட்டு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆரணி, சேந்தமங்கலம், செந்துறை, லப்பைக்குடிகாடு, நன்னிலம், நெய்வேலி AWS, குறிஞ்சிப்பாடி, செஞ்சி, அரிமளம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திண்டிவனம், கலவை AWS, செட்டிகுளம், சென்னை DGP அலுவலகம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கடலூர், சென்னை MGR நகர், நடுவட்டம், சோலையாறு, பெலாந்துறை, ஏற்காடு, தத்தியெங்கர்பேட்டை, ஊத்தங்கரை, ஓமலூர், குமாரபாளையம், காட்டுமன்னார் கோயில், சிவகிரி, கொள்ளிடம், அருப்புக்கோட்டை பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் - லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 27-ம் தேதி வரை பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+