சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 3-வது நாளாக பெய்த கனமழை.. இந்த 5 மாவட்டங்களில் பலத்த மழை கொட்ட போகுது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று 3-வது நாளாக சில இடங்களில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழ்நாட்டின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

Recommended Video

    வெறும் ஒரு மணி நேரம் பெய்த மழை.. அதுக்கே மூழ்கிய சாலைகள்.. சிங்கார சென்னை 2.0வில் தீர்வு காணப்படுமா?

    அதெல்லாம் 5 ஆண்டுக்கு முன்பே முடிஞ்சிடுச்சி.. அடுத்த 10வது நிமிடத்தில் கள்ளக்காதலனுடன் சென்ற பெண் அதெல்லாம் 5 ஆண்டுக்கு முன்பே முடிஞ்சிடுச்சி.. அடுத்த 10வது நிமிடத்தில் கள்ளக்காதலனுடன் சென்ற பெண்

    சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை கொட்டியது. சென்னையின் நகர்ப்புற பகுதிகள் மட்டுமில்லாது புறநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    சென்னையில் இன்றும் மழை

    சென்னையில் இன்றும் மழை

    இந்த நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். விழுப்புரத்திலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    விழுப்புரத்தில் வெள்ளம்

    விழுப்புரத்தில் வெள்ளம்

    விழுப்புரம் பஸ் நிலையத்தில் வெள்ளநீர் புகுந்து குளம்போல் காட்சியளித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (19ஆம் தேதி ) மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், மற்றும் ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற பகுதியில் லேசான மழையும், மற்ற பகுதியில் வறண்ட சூழ்நிலையும் காணப்படும் என்று கூறியுள்ளது.

    கோவை, தேனி

    கோவை, தேனி

    நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அல்லது பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

    சென்னையில் நாளை எப்படி?

    சென்னையில் நாளை எப்படி?

    சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

    English summary
    It rained heavily in some places in Chennai for the 3rd day today. It has been raining heavily in some parts of Tamil Nadu for the last few days due to the southwest monsoon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X