Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, விருதுநகர் மாவட்டம் பிலவாக்கல் அணை பகுதியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை:வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, தீவிரமாக கொட்டித்தீர்த்தது. அக்டோபர் 1 தேதி முதல் நேற்று டிசம்பர் 07ஆம் தேதி வரை 683.4 மில்லி மீட்டர் பருவமழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 77 சதவீதம் கூடுதலாகும்.

Heavy rain is expected in Tamil Nadu for 2 days - Chance of light rain in Chennai

இந்த மழைப்பொழிவால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏரி குளங்கள் கூட நிரம்பின. அணைகள் நிரம்பியதால் உபரிநீர் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 8,690 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் 2, 989 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 94.52 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224 .297 டிஎம்சி நீரில், 6ஆம் தேதி நிலவரப்படி 212.009 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, விருதுநகர் மாவட்டர் பிலவாக்கல் அணை பகுதியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. சுரளகோடு, கன்னியாகுமரியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலையில் 2, சேரன்மகாதேவி, பர்லியார், சோத்துப்பாறை, சிற்றாறு, பூதபாண்டி, பேச்சிப்பாறை,கன்னிமார், சிவலோகம் பகுதியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

நாளைய தினம் அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10,11ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

12ஆம் தேதியன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Recommended Video

    கரூர்: மழையால் நிரம்பி வழியும் கல்லிடை குளம்.. சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+