சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைநகரில் கொட்டித் தீர்த்த மழை... எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பதிவானது தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென கொட்டிய மழை... ஆட்டம் போட்டு ரசித்த மழலைகள்...

    சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Heavy rains were widespread in Chennai and suburbs last night

    சென்னையில் பெய்துள்ள மழை மி.மீ அளவில், மீனம்பாக்கம் - 75 மி.மீ , அலந்தூர் - 75 மி.மீ
    காட்டங்குளத்தூர் - 66 மி.மீ , அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 64 மி.மீ , கே.கே.நகர் - 64 மி.மீ
    டிஜிபி அலுவலகம் - 51
    கோலப்பாக்கம் - 42
    செம்பரபாக்கம் ஏரி - 41
    பூந்தமல்லி - 35
    நுங்கம்பாக்கம் - 21
    சோலிங்கல்லூர் - 17
    பாரிஸ் கார்னர் - 15
    இந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 13
    கொரட்டூர் - 13
    அயனாவரம் - 13
    பெரம்பூர் - 11
    பூண்டி ஏரி - 11
    ரெட்ஹில்ஸ் ஏரி - 7
    சத்தியபாமா பல்கலைக்கழகம் - 7

    இதே போல், திருவேற்காடு, மதுரவாயல், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான, திருவாதவூர், கொட்டாம்பட்டி, மேலவளவு, கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. செங்கம், சாத்தனூர், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், திடீரென மேகம் சூழ்ந்து குளிர்ச்சிக் காற்று வீசியது. சற்று நேரத்தில் காற்று பலமாக வீசத் தொடங்கியதை அடுத்து, மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோன்று, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக சிவகங்கையில் வறட்சி நிலவி வந்த நிலையில், நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    English summary
    Chennai Meteorological Center Report that, Heavy rains were widespread in Chennai and suburbs last night
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X