சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவதூறு... மாரிதாஸிடம் ரூ. 1.5 கோடி இழப்பீடு கேட்டு நியூஸ் 18 அதிரடி வழக்கு... ஹைகோர்ட் நோட்டீஸ்!

நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் பற்றி இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் என மாரிதாசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் மாரிதாசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன். பத்திரிக்கை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராம்நாத்கோயங்கா விருது, விகடன் விருது என பல விருதுகள் பெற்றவர். அதேபோல, மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் செய்தித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.

High court order to YouTuber Maridhas remove defamatory videos

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன். பத்திரிக்கை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராம்நாத்கோயங்கா விருது, விகடன் விருது என பல விருதுகள் பெற்றவர். அதேபோல, மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் செய்தித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.

கடந்த சில மாதங்களாக யூ-டியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வேலை செய்யும் குணசேகரன், ஜீவ சகாப்தன் மற்றும் அசீப் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டு வந்தார்.

அந்த வீடியோக்களில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியும் பெரும்பாலானோர் திராவிடர் கழகம் மற்றும் திமுக'வின் பின்னணியில் செயல்படுவதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், தங்களுடைய நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட மாரிதாசிடம் ஒன்றறை கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நியூஸ் 18 தொலைக்காட்சியின் சுதந்திரமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் திட்டமிட்டே ஆதாரமற்ற வீடியோக்களை தயாரித்து ஒன்றின் பின் ஒன்றாக மாரிதாஸ் வெளியிட்டு வருவதாக மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்

குறிப்பாக குணசேகரன் மற்றும் ஜீவசகாப்தன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு வீடியோக்களை மாரிதாஸ் சட்டவிரோதமாக வெளியிட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

மேலும், நியூஸ் 18 செய்தியாளர்கள் குறித்த தன்னுடைய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூஸ் 18 நிறுவனம் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறி போலி மின்னஞ்சல் வெளியிட்டும் மாரிதாஸ் மோசடி செய்தது குறித்து சென்னை சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.எஸ்.கிருஷணன் தெரிவித்தார்.

மாரிதாசின் இந்த திட்டமிட்ட சதியால் மக்கள் மத்தியில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீதான நம்பகத்தன்மை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

தன்னுடைய யூடியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால் நஷ்ட ஈடாக ஒன்றறை கோடி ரூபாய் வழங்க மாரிதாசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.

Recommended Video

    Channel Vision Madan Ravichandran மீது வழக்கு தொடுத்த உதயநிதி | Oneindia Tamil

    இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மாரிதாசுக்கு உத்தரவிட்டார்.

    English summary
    The Chennai High Court has ordered Maridhas to remove all defamatory videos released so far about News18 Tamil Nadu TV and its employees. The judge also ordered Maridhas to file a response by August 12.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X