சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யூ டூ ப்ரூட்டஸ், ஜெகத் கஸ்பரை விட்டுட்டு.. கனல் கண்ணன் கைதா? நாளை பாருங்க! காடேஸ்வரா விட்ட அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை : பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன்,"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என கூறியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனல் கண்ணன் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து பல நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் இன்று புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது

 கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இந்நிலையில் கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சுதந்திர தினத்தில் ஜனநாயகப் படுகொலை. கொடுங்குற்றவாளி போல் கனல் கண்ணன் அவர்களை கைது செய்த நோக்கம் என்ன? கருத்துரிமை இந்துக்களுக்கும், இந்து இயக்கங்களுக்கும் கிடையாதா?

இந்து முன்னணி

இந்து முன்னணி

தில்லை நடராஜர் முதற்கொண்டு இந்து தெய்வங்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்திடும் யாரொருவரின் மீதும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.1மணி‌நேரம் கொடுங்கள் சங்கிகளை முடித்துக் கட்டுகிறோம் என்று கொலை மிரட்டல் விடுத்த SDPI ஜன்னத் ஆலிமா மீது நடவடிக்கை இல்லை.

இந்து முன்னணி

இந்து முன்னணி

தில்லை நடராஜர் முதற்கொண்டு இந்து தெய்வங்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்திடும் யாரொருவரின் மீதும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.1மணி‌நேரம் கொடுங்கள் சங்கிகளை முடித்துக் கட்டுகிறோம் என்று கொலை மிரட்டல் விடுத்த SDPI ஜன்னத் ஆலிமா மீது நடவடிக்கை இல்லை.

ஜெகத் கஸ்பர்

ஜெகத் கஸ்பர்

இஸ்லாமியர்கள் தனி நாடு கேளுங்கள் என்று பிரிவினை பேசிய ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை இல்லை. இன்று நாடே சுதந்திர தினம் கொண்டாடுகின்ற வேளையில் இது துக்க தினம், கருப்பு தினம் என்று தேச விரோத கருத்துக்களை, குறிப்பாக ஈவேரா சொன்ன கருத்துக்களை பதிவிட்டு வருகின்ற திராவிட சித்தாந்தவாதிகள் மற்றும் அமைப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Recommended Video

    கனல் கண்ணன் அப்படி என்ன பெரியார் பற்றி பேசினார்?
    நாளை ஆர்பாட்டம்

    நாளை ஆர்பாட்டம்

    மாறாக கணல் கண்ணன் கூறிய கருத்தை மிகப் பெரிய துவேஷமாக கருதி, ஒரு பயங்கரவாதியைப்போல் மிக ரகசியமாக கைது செய்திருப்பது திராவிட மாடல் அரசின் வன்மத்தின் உச்சம். கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து நாளை காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக அரசின் தொடரும் இந்து விரோத பாரபட்ச அணுகுமுறை மக்கள் மனதில் மிகப்பெரும் கோபத்தை உருவாக்கி வருகிறது. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்." என கூறியுள்ளார்.

    English summary
    Hindu munnani kadeswara subramaniam condemn for Kanal Kannan arrest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X