ரிஷிவந்தியத்தில் மதமாற்ற சர்ச்சை..நோட்டீஸ் கொடுத்த கிறிஸ்தவர்கள் மீது விபூதி வீசிய இந்து முன்னணி
ரிஷிவந்தியத்தில் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக வந்தவர்கள் முகத்தில் இந்து அமைப்பினர் விபூதியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி: சமீப காலங்களில் மதமாற்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன. ரிஷிவந்தியத்தில் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக நோட்டீஸ் கொடுத்து வந்தவர்கள் முகத்தில் இந்து அமைப்பினர் விபூதியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் உள்ள இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக நேசிக்கின்ற கொலைகாரன்,தெய்வ சத்தம் என்ற தலைப்பில் துண்டு நோட்டீஸ்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நீங்கள் எப்படி இந்த நோட்டீசை வழங்கி இந்துக்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்துகிறீர்களா? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிறிஸ்தவர்கள் மீது விபூதியை அள்ளி வீசினர். இதனால் பதற்றமடைந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர்,
தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிறிஸ்தவர்களை தகவலை எழுதி வாங்கிவிட்டு அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீசார் அவர்களை பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கிறித்துவ மதம் சார்ந்த துண்டுபிரசுரங்களை வழங்கினர். இது குறித்து தகவறிந்த இந்து முன்னணியினர் கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வேனில் வந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications