சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திராவிடத்தை எப்படி எருமை மாட்டுடன் ஒப்பிடலாம்? - சீமானை கண்டிக்கும் ஜெயக்குமார்

கருப்பாக இருப்பதால் எருமை மாடும் திராவிடரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியதற்கு அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு சீமான் பேசியுள்ளதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டார்க் திராவிடன் -பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தை நேற்று பதிவிட்டிருந்தார்.

போதை மருந்து கொடுத்து 3 நாள்! இருட்டறையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! ஆளும்கட்சி பிரமுகர் மகன் கைதுபோதை மருந்து கொடுத்து 3 நாள்! இருட்டறையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! ஆளும்கட்சி பிரமுகர் மகன் கைது

இந்த புகைப்படம் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரது வாசகத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், நீ தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு என்று சொன்னார்.

முகமூடி அணியவேண்டாம்

முகமூடி அணியவேண்டாம்

திராவிடன், தமிழன் ஏன் பல முகமூடிகளை அணிய வேண்டும் என்று கேட்டார் சீமான். எச்.ராஜா கூட மோடியை திராவிடன் என்று சொல்கிறார். தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள், தேவைப்பட்டால் திராவிடன், தேவைப்பட்டால் தமிழன் என்று சொல்கிறீர்கள் என்றார். முதலில் இந்தியன், பிறகு திராவிடன், அப்புறம் தமிழன், பிறகு எந்த சாதி என்று கேட்பார்கள்.

பெருமைக்குரிய தமிழன்

பெருமைக்குரிய தமிழன்

குழம்பாமல் பெருமைக்குறிய தமிழன் என்று சொல்லுங்கள். கேஜிஎப் பட ஹீரோ யாஷ் தான் பெருமைக்குரிய கன்னடன் என்றுதான் சொல்கிறார். அதே போல பெருமைக்குரிய தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே.
யுவன் சின்னப்பிள்ளை அதை விட்டு விடுவோம்.

விமர்சிக்க வேண்டாம்

விமர்சிக்க வேண்டாம்

எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவே நோயாகிவிடும் என்று சொன்னார் சீமான். தொடர்ச்சியாக எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து சொன்னால் அது நோயாகிவிடும். அது அவருடைய கருத்து என்று கூறிய அவர், தென்னாப்பிரிக்காவில் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள், அவர்கள் திராவிடர்களா. எருமை மாடும் கருப்பாக உள்ளது. அது திராவிடரா என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜெயக்குமார் கண்டனம்

ஜெயக்குமார் கண்டனம்

திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு சீமான் பேசியுள்ளதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கருப்பாக இருப்பதால் திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றார்.

English summary
Former AIADMK minister Jayakumar has condemned Seeman for comparing Dravida to a buffalo. Politically anyone can comment. But he condemned the comparison of Dravida with the buffalo, saying that it was slandering Dravida.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X