Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்டையார்பேட்டை இஎஸ்ஐ அலுவலகம் வெளியிட்ட முக்கியமான தகவல்! இந்த பலனை எப்படி பெறுவது ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளி கோவிட் 19 வைரசால் உயிர் இழந்தால் அவர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் என சென்னை தண்டையார் பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு நிறுவனத்தில், அல்லது கடையில், அல்லது ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி அளிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி அளிக்கப்படுகிறது. அதாவது 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ கட்டாயம் ஆகும். இவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்ந்து இலவசமாக சிகிச்சை பெறலாம். அறுவை சிகிச்சை, விபத்து போன்றவையும் இலவசமாக அளிக்கப்படும்.

இந்நிலையில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

7லட்சம் நிவாரணம்

7லட்சம் நிவாரணம்

இதேபோல் epfo திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களுக்கு வைப்பு தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் பலன் 6 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.. மேலும் இந்த பலன்களை பெறுவதற்கு இஎஸ்ஐ, இபிஎஃப் திட்ட தொழிலாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

ஓய்வூதிம் கிடைக்கும்

ஓய்வூதிம் கிடைக்கும்

இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்துள்ள பணியாளர் இறந்துவிட்டால், பணியாளரின் குடும்பத்திறகு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கொடுக்கப்படும் உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரை, பெண் குழந்தையாக இருந்தால், அவரது திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகளைப் பெறலாம்.

இஎஸ்ஐ குடும்பம்

ESIC திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் (Insured person) குடும்பங்களுக்கு ஒரு நிவாரணமாக, ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டறிவதற்கு முன்னதாக ESICஇன் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட, அனைத்து வாரிசுகளுக்கும் நன்மை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பதிவு செய்திருக்கணும்

பதிவு செய்திருக்கணும்

அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் தொழிலாளர் இ.எஸ்.ஐ.சி. கணக்கில் குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு வரவு வைத்திருத்தல் அவசியம் ஆகும். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு தினசரி ஊதியத்தில் சுமார் 90 சதவீதமானது ஓய்வூதியமாக வழங்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

EPFO ஊழியர்கள்

EPFO ஊழியர்கள்

EPFO இன் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டத்தின் உறுப்பினர்களின் எஞ்சியிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் EDLI இன் நன்மைகள் தரப்படும். அதாவது தொழிலாளி இறந்தால் அவர்களின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் யார் இருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் தரப்படும். அதேபோல் ஒரு தொழிலாளி இறந்தால், அவர் பணிக்கொடை (Gratuity) விதிகளின் படி வழக்கமாக கூறப்படும் குறைந்தபட்ச காலம் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈபிஎஃப் மற்றும் எம்.பி. சட்டத்தின் (EPF & MP Act) கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+