"தம்பி ஸ்டாலின்".. பாசத்துடன் அழைத்த ராமதாஸ்.. கூடவே ஒரு கோரிக்கை.. போராட்டம் கிடையாது என அதிரடி
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் புதிய கோரிக்கை ஒன்றை பாசத்துடன் முன்வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என கோர்ட் அறிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடுகள் சுப்ரீம்கோர்ட்டில் செய்யப்பட்டிருந்தன..
இந்த வழக்கில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

பாமக கோரிக்கை
இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக பாமக சொல்லி வருகிறது.. வருத்தம் தருவதாக உள்ளதாகவும் ராமதாஸ், அன்புமணி, உள்ளிட்டோரும் விடாமல் தெரிவித்து வருகிறார்கள்.. உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும், அதனால், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மறுபடியும் சட்டமியற்ற வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கை ஒன்றை விடுக்க ஆரம்பித்துள்ளது.

பாமக கோரிக்கை
அத்துடன், சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது என்று அன்புமணி ராமதாஸ் மனம் திறந்து பாராட்டினாலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்பதையும் பாமக தரப்பில் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.. இந்நிலையில்தான், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் புதிய கோரிக்கை ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ளார்.

வன்னியர்கள்
பாட்டாளி மக்கள் கட்சி அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது... இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். போராட்டங்கள் ஏதும் நான் அறிவிக்கப் போவதில்லை" என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் ஐயா
வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தை முதல்வர் பார்த்துக் கொள்வார், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸும் பேசியுள்ளார்.. இவர்கள் இருவரின் பேச்சுக்களும், திமுக தரப்புக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.. மேலும் திமுகமீது எந்தவிதமான ஆதங்கத்தையும் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தவில்லை..

டாக்டர் ராமதாஸ்
மாறாக, ஒத்துழைப்பு கலந்த நம்பிக்கையைதான் சொல்லி உள்ளார்.. அத்துடன், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நடத்திவிட்டால், அது ஆளும் அரசின் மீது கறையையே ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது.. அதனால்தான், தம்பி ஸ்டாலின் என்று அழைத்து, உரிமையுடன் டாக்டர் ஐயா கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு என்ன மாதிரியான பதிலை அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications