அப்போலோ ஹாஸ்பிடல் வேண்டாம்! காவேரி ஹாஸ்பிடல் செலக்ட் ஆனது எப்படி? செந்தில்பாலாஜி மனைவி மேகலா சாய்ஸ்!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காவேரி மருத்துவமனையை தேர்வு செய்ததே அவருடைய மனைவி மேகலா தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால் இது குறித்த தகவல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் உடனடியக இரண்டாவது ஒபினியன் கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அப்போலோவில் இருந்து இதய சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டு அவரிடமும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா.
அப்போலோ மருத்துவரும் பைபாஸ் சர்ஜரி செய்வது தான் நல்லது எனக் கூறியிருக்கிறார். அதே போல் ஈ.எஸ்.ஐ. மருத்துவர்களும் இதே கருத்தை தெரிவித்ததால் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார் செந்தில்பாலாஜி மனைவி மேகலா. இதையடுத்து எங்கே அறுவைச் சிகிச்சை செய்வது என்ற முடிவை செந்தில்பாலாஜி மனைவி வசமே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் விட்டுவிட்டது.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்போலோ ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சை செய்ய விரும்பாத மேகலா இது குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சரிடமும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா முடிவின் படி தான் அறுவைச் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை செலக்ட் செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அமைச்சர் மா.சுப்ரமணியன் எடுத்துக் கூறியிருந்தார். சிகிச்சை விவகாரத்தை பொறுத்தவரை தனிமனித விருப்பத்திற்குட்பட்டது எனக் கூறியிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications