சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சின்னம்மா" வர்றதுக்குள்ள சீக்கிரம்.. அவசரப்படுத்தும் பாஜக.. அதிமுக கொடுக்க போவது இவ்வளவுதான்!

பாஜகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: 60 சீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்துள்ள பாஜகவுக்கு அதிமுக கொடுக்க போகும் சீட் இவ்வளவுதான் என்று ஒரு தகவல் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவாவது கிடைக்குமா அல்லது இதையும் அதிமுக குறைக்குமா என்று தெரியவில்லை.

சசிகலா வெளியே வருவதற்குள் வேலையை முடித்து விடும் வேகத்தில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் சீட் எண்ணிக்கையை சட்டுப்புட்டென்று இறுதி செய்யும் வேலைகள் நடக்கின்றன.

மறுபக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கான சீட்டையும் இறுதி செய்ய அதிமுக தீவிரமாக உள்ளது. இந்த நிலையில்தான் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

"நீ இல்லாம தூங்க முடியலை.. கிளம்பி வா".. கெஞ்சிய கணவர்.. மறுத்த மனிஷா.. அடுத்து நடந்த ஷாக்!

சீட்டு

சீட்டு

அதாவது அதிமுகவைப் பொறுத்தவரை நல்ல சீட்டுகளில் நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையாம். எனவே 150 சீட்களை அதிமுக தனக்கு ஒதுக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாம். மீதமுள்ள 84 சீட்டுகளைத்தான் அது கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து தரப் போகிறது.

அதிமுக

அதிமுக

அப்படிப் பார்த்தால் பாஜகவுக்கு 38 சீட்டுகள் வரை தரத் தயாராக இருக்கிறதாம். பெரிய கட்சியான பாமகவுக்கு அவர்களை விட குறைவாகத்தான் அதாவது 20 சீட்டுகள்தான் தரப் போவதாக இருக்கிறார்களாம் அதிமுக தரப்பில் இதை பாமக ஏற்குமா என்று தெரியவில்லை. அதேசமயம், வேறு ஏதாவது காம்ப்ரமைஸ்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் ஏற்கும் என்றே தெரிகிறது.

தேமுதிக

தேமுதிக

மறுபக்கம் தேமுதிகவுக்கு 15 சீட்டுகள்தான் கிடைக்குமாம். அதைத் தாண்டி எதிர்பார்க்க வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள். ஜி.கே. வாசனின் தமாகாவுக்கு 5 சீட் கிடைக்க வாய்ப்புண்டு... இதில் வாசன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரியவில்லை. இரட்டை இலையாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். தாமரை என்றும் சொல்கிறார்கள். அதேசமயம், தனி சின்னம் என்றும் சொல்கிறார்கள். எதில் நிற்க போகிறார்கள் என்பது வாசனுக்கே வெளிச்சம்.

 உண்மையா?

உண்மையா?

இவை போக மீதமுள்ள உதிரிக் கட்சிகளுக்கு 6 சீட் வரை கிடைக்க வாய்ப்புண்டு. அதிலும் பாதிப் பேருக்கு இரட்டை இலை சின்னத்திலேயே நிற்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு கணக்குதான். இது உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை.

குழப்பம்

குழப்பம்

இதில் இன்னொரு உள்குத்தும் இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னர் பாஜக பாமக தேமுதிக ஆகியவை தனிக் கூட்டணியாக பிரிந்தோ அல்லது உள்ளேயே இருந்து கொண்டோ அதிமுகவுக்குக் குடைச்சல் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். இதுதான் அதிமுகவுக்கும் உள்ளூர உதைக்கிறதாம். ஆனால் இப்போதைக்கு பாஜக தரப்புக்கு பணிந்து போவதை தவிர வேறு வழியில்லை என்பதால் கையை பிசைந்து கொள்வதை தவிர வேறு வழியில்ல என்றும் சொல்கிறார்கள்.

பார்க்கலாம், "சின்னம்மா" வந்த பிறகாவது சிறப்பாக ஏதாவது சம்பவம் நடக்கிறதா என்பதை!!

English summary
How many seats will be allotted to BJP in AIADMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X