விழவே செய்யாது.. சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நிற்கும் உலக்கை.. பின்னணி!
சென்னை : உலக்கை எந்தப் பிடிமானமும் இன்றி செங்குத்தாக நிற்பதன் அடிப்படையில் பழைய காலங்களில் சூரிய / சந்திர கிரகணங்களைக் கணக்கிட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.
பழைய காலங்களில், கிரகணம் நடப்பதைக் கண்டறிய உலக்கைகளை செங்குத்தாக நிறுத்தி வைப்பார்களாம். மற்ற நேரங்களில் பிடிமானம் இன்றி செங்குத்தாக நிற்காத உலக்கை, கிரகண நேரத்தில் மட்டும் செங்குத்தாக நிற்குமாம்.
கிரகணம் முடிவடையும்போது உலக்கை கீழே விழும் எனக் கூறப்படுகிறது. இப்போதும், கிராமப்புறங்களில் உலக்கைகளை நிறுத்தி கிரகணத்தை உணர்கிறார்கள்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. இன்று தோன்றியுள்ள கிரகணம் பகுதி சூரிய கிரகணம் (partial solar eclipse) என அழைக்கப்படுகிறது. அதாவது, பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கும் நிகழ்வையே பகுதி சூரிய கிரகணம் என்கிறோம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து தற்போது சூரிய கிரகணம் நிகழ்ந்து வருகிறது.

அறிவியல்
சூரிய கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் நேரடியாகப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பது நம் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது கிரகணங்களை அறிய அறிவியல் பல நுட்பங்களைக் கண்டறிந்துவிட்டது.

சிறப்பு ஏற்பாடுகள்
இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரியத் துவங்கியது. சென்னையில் மாலை 5:14 மணிக்கு சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு நிகழ்ந்தது. சூரிய கிரகணகத்தைப் பார்ப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உலக்கை டெக்னிக்
பழைய காலங்களில் கிரகணங்களை அறிய ஒரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். உலக்கையின் அடிப்பகுதி தட்டையாக இல்லாததால் அதை செங்குத்தாக எந்தப் பிடிமானமும் இன்றி நிறுத்தி வைக்க முடியாது. எனினும், சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். பழைய காலத்தில் கிராமங்களில் சூரிய கிரகணம் நிகழ்வதை உலக்கைகளை நிறுத்தி கண்டறிவார்கள். கிரகணம் முடிந்தவுடன் இந்த உலக்கைகள் தானாகவே கீழே விழுந்துவிடும்.

கிராமங்களில்
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது, தாம்பாள தட்டுகளில் ஆரத்தி கரைத்து, உலக்கையை செங்குத்தாக நிறுத்துவார்கள். அந்த உலக்கைகள் கிரகணம் நீடிக்கும் வரை அப்படியே நிற்கும். சூரிய கிரகணம் தொடங்குவதையும், முடிவதையும் இதைக் கொண்டே கணக்கிட்டார்கள். தற்போதும் கூட சில கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு உலக்கை வைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கிரகணத்தின்போது நிலவும் அதிகமான புவி ஈர்ப்பு விசை காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் என இதற்கு காரணமும் சொல்லப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications