சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூயஸ் கால்வாய் திறந்ததுமே.. குபீரென குவிந்த அழகிகள்.. "அந்த தொழில்.." ஆடிப்போன் மும்பை.. ரீவைண்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: 1869 நவம்பர் 27 அன்று.. அதாவது.. சூயஸ் கால்வாய் எகிப்தால் திறக்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு, சரக்கு ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அந்த வழியாக வந்த முதல் கப்பலை பேரிடி தாக்கியது.

பிரான்ஸ் நாட்டின் போர்டியாக்ஸிலிருந்து புறப்பட்ட நோயல் என்ற கப்பல் செங்கடலில் மூழ்கிவிட்டதாக "பம்பாய் கார்டியன்" பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

ஒயின் தயாரிப்பில் புகழ்பெற்றது போர்டியாக்ஸ் பகுதி. ஒயின் சரக்குகளுடன் கப்பல் மூழ்கியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றிப் போன கப்பல்கள்

சுற்றிப் போன கப்பல்கள்

ஆனால், மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கும் சூயஸ் கால்வாய் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கான பயண நேரத்தை மூன்று மாதங்களுக்கும் மேலாக நான்கு அல்லது ஐந்து வாரங்கள் வரை குறைத்தது. எனவே, இந்தியா அச்சப்படவில்லை. தொடர்ந்து சூயஸ் கால்வாயை கப்பல் போக்குவரத்திற்கு பயன்படுத்தியது. சூயஸ் ஓப்பன் ஆகும் வரை, கப்பல்கள் தென்னாப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் முனையை சுற்றி செல்ல வேண்டியிருந்தது. அதற்கு விடிவாக வந்ததுதான் சூயஸ் கால்வாய். இதன் மூலம், மும்பையிலிருந்து சர்ரென்று குறுக்கு வழியாக ஐரோப்பா சென்று சேர முடிந்தது கப்பல்கள்.

அரபிக் கடல்

அரபிக் கடல்

ஒரு வகையில், அரபிக் கடலில் மும்பை மிகவும் வளர்ச்சியடைய சூயஸ் கால்வாய் உதவியது. ஐரோப்பாவிலிருந்து வரும் கப்பல்கள் அணுக எளிதான இடமாக மாறியது. எனவேதான், மும்பை இந்தியாவின் நுழைவாயிலாக மாறியது. இன்று வரை பாடநூல்களில் மும்பையை இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்க சூயஸ் கால்வாய் உதவியது என்றால் அது மிகையில்லை.

மும்பை துறைமுகம்

மும்பை துறைமுகம்

மும்பையின் ரயில் பாதைகளின் நெட்வொர்க் வளர்ந்து வந்த பிற நகரங்களை இணைத்ததால், மும்பை துறைமுகத்திலிருந்து சரக்குகள் பிற நகரங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஒருபக்கம் இப்படியான நல்ல வளர்ச்சிகளை மும்பை அடைய சூயஸ் கால்வாய் உதவியது. ஆனால், இன்னொரு சிக்கலும் எழுந்தது.

விபச்சார அழகிகள் புகலிடமான மும்பை

விபச்சார அழகிகள் புகலிடமான மும்பை

ஆசிய-ஐரோப்பிய கண்டங்களுக்கிடையேயான பயணம் விரைவாகவும் மிகவும் வசதியாகவும் மாறியதால், மும்பை வாழ்க்கை முறையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கத் தொடங்கியது. "1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்படுவதற்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த வெளிநாட்டு விபச்சார பெண் மும்பையில் அவ்வளவு எளிதாக தென்பட மாட்டார்." என்று எஸ்.எம். எட்வர்ட்ஸ் தனது புத்தகமான தி பாம்பே சிட்டி போலீசில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் 1929 இல் வெளியிடப்பட்டது. பெரிய ஐரோப்பிய கப்பல் நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவுக்கு போக்குவரத்தை ஆரம்பித்த பிறகு அந்த நாட்டு விபச்சார பெண்களின் புகலிடமாக மும்பை மாறிவிட்டது என்று அந்த புத்தகத்தில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 நடுத்தர வயது பாலியல் தொழிலாளர்கள்

நடுத்தர வயது பாலியல் தொழிலாளர்கள்

இந்த ஐரோப்பிய பெண்கள் யாருடைய கட்டாயமும் இல்லாமல் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரில் தனித்தனியாகத்தான் மும்பை வந்தனர். ஓரளவுக்கு நடுத்தர வயது கொண்டவர்களாக இந்த பெண்கள் இருந்தனர். இளம் வயதில் ஐரோப்பாவில் செக்ஸ் தொழில் செய்து விட்டு சற்று வயதான பிறகு அவர்கள் இந்த கப்பல்கள் வழியாக மும்பை வந்து சேர்ந்து இங்கு தொழில் செய்ய ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இந்தியாவின் பிற நகரங்களை ஒப்பிட்டால் மும்பையில்தான் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அதிகமாக இருந்தனர் என்று எழுத்தாளர் அஸ்வினி தாம்பே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகள்

பல நாடுகள்

போலந்து போன்ற மிக தூர நாடுகளைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் கூட மும்பைக்கு வந்தனர். இதற்கு சூயஸ் கால்வாய் வழியாக மும்பைக்கு ஐரோப்பிய கப்பல்கள் ரெகுலராக வருகை தந்தது ஒரு காரணமாக இருந்தது என்று அந்த காலகட்டத்தில் வாழ்க்கை முறை பற்றி வெளியாகி உள்ள பல புத்தகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மும்பை தெருக்கள்

மும்பை தெருக்கள்

பல ஐரோப்பிய பெண்கள் டார்டியோ, கிராண்ட் ரோடு மற்றும் பைகுல்லாவில் உள்ள விபச்சார விடுதிகளில் பணிபுரிந்தனர். சுக்லாஜி வீதியின் ஒரு பகுதி "பாதுகாப்பான கல்லி" அல்லது "வெள்ளை பாதை" என்று அழைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐரோப்பிய விபச்சார விடுதிகள், பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மற்றும் மாலுமிகளுக்கு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்பட்டுள்ளன. சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற கப்பல் மார்ச் 23ம் தேதி சிக்கி ஒரு வாரம் கழித்து மீட்கப்பட்ட நிலையில், இந்த கால்வாயின் வரலாற்று சம்பவங்கள் நினைவு கூறப்படுகின்றன. அதில் ஒரு சம்பவம்தான் மும்பை செக்ஸ் தொழில் தொடர்பான இந்த வரலாறும்.

English summary
The Mumbai city’s port boomed and Eastern European women began to work in its brothels, after opening of the Suez Canal, says many books.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X