டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
டிஎன்பிஎஸ்சி சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு ஒவ்வொரு பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஜூலை 24ல் தேர்வு
ஒவ்வொரு பதவிக்கு ஏற்க தனித்தனியாக தேர்வுகள் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். சமீபத்தில் குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

7,382 பணியிடங்கள்
இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.

ஹால்டிக்கெட் வெளியீடு
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (வியாழக்கிழமை) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in இணையதளம் சென்று ஹால்டிக்கெட் பதிவிறக்கி கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட் எப்படி பெறுவது?
www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்துக்கு விண்ணப்பத்தாரர்கள் செல்ல வேண்டும். அங்கு ஹால் டிக்கெட் டவுன்லோட்(Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு one-time registration என்பதை கிளிக் செய்து Registered User என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு பயனர் ஐடி (Login ID) மற்றும் பாஸ்வேர்டு (Password) கொடுத்து கேப்சாவை சரியாக டைப் செய்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் என்பதை கிளிக் செய்து Application ID and DOB கொடுத்தால் ஹால்டிக்கெட் தோன்றும். அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து பதிவிறக்கி கொள்ள வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications