கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெறுவது எப்படி? கூட்டு பட்டாவில் பெயர் நீக்குவது எப்படி? முக்கியம்
சென்னை: கூட்டு பட்டா தனிப்பட்டா, என்றால் என்ன? கூட்டுப்பட்டாவில் பெயர் சேர்க்க, நீக்க என்ன செய்ய வேண்டும் ? தனிப்பட்டா பெற தேவையான ஆவணங்கள்? தனிப்பட்டா பெற என்ன செய்யவேண்டும் தெரியுமா? இவைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.. இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிழின் பெயர் தான் பட்டா என்பதாகும்.. ஆனால், ஒரு நிலத்தின் வகையை பொறுத்தும், உரிமையாளர் மற்றும் பயன்பாட்டை பொறுத்தும் பட்டா ஆவணம் மாறுபடும்.

தனி பட்டா, கூட்டு பட்டா
பட்டாவில் தனி பட்டா, கூட்டுப்பட்டா என்ற வகைகள் உண்டு.. இதில் கூட்டுப்பட்டா என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டதுதான் கூட்டு பட்டா (joint patta) ஆகும்.. இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக பதிவாகியிருக்காது. மொத்தமாக எல்லோருடைய பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.
அதாவது உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கி ஆவணம்தான் கூட்டு பட்டா ஆனால், தனி பட்டாவில் (Individual Patta) தனிப்ப்டட நபரின் பெயர், சர்வே நெம்பர் உட்பிரிவு எண் போன்றவை தனித்தனியாக எழுதப்பட்டிருக்கும்..
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா
தனி பட்டா என்பது, ஒரு கூட்டு அல்லது பொதுப் பட்டாவிலிருந்து தனி நபருக்காக பிரிக்கப்பட்ட நில உரிமை ஆவணம் ஆகும்.. அதாவது, ஒரு நபர் தனக்கு சொந்தமான நில உரிமையை உறுதி செய்ய, மற்றவர்களின் உரிமையிலிருந்து பிரித்துக்கொள்ள வேண்டும்.
அப்படி கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற வேண்டுமானால், குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். முதலில் அந்த சொத்துக்கு உரிய அனைவரும் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். வாரிசு சொத்து என்றால், வாரிசு சான்று அல்லது பங்கீட்டு ஆவணம் இருக்க வேண்டும்.
ஆவணங்கள் என்னென்ன
பின்னர் தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் மூலம் "பட்டா பிரிப்பு" விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பழைய பட்டா, சிட்டா, அடங்கல், பங்கீட்டு பத்திரம் அல்லது விடுவிப்பு பத்திரம் போன்ற ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டும். வருவாய் ஆய்வாளர் (VAO) மற்றும் நில அளவையாளர் நிலத்தை அளந்து, யார் எந்த பகுதியில் உரிமையாளர் என்பதை உறுதி செய்து அறிக்கை அளிப்பார்கள்.
அதன்பின் தாசில்தார் ஒப்புதல் அளித்தால், கூட்டுப்பட்டா ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பட்டா வழங்கப்படும். அனைவரும் சம்மதித்தால் செயல்முறை எளிதாக முடியும்; சம்மதம் இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பு தேவைப்படும்.
தனிப்பட்டா ஆவணம்
தனி பட்டா பெற விண்ணப்பிக்க, தற்போதுள்ள கூட்டு பட்டா, முந்தைய பட்டா நகல் மற்றும் பரிசளிப்பு ஆவணம், விற்பனைச் சான்றிதழ், பகிர்வு உடன்படிக்கை, நில வரைபடம், சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, நில அளவை மேற்கோள்வதற்கான கோரிக்கை மனு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். இறுதியில், எந்தவிதமான சிக்கலும் நிலத்தில் இல்லாதபட்சத்தில் 30 முதல் 60 நாளில் தனி பட்டா கிடைத்து விடும். ஒருவேளை, கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் தராவிட்டால், கோர்ட் மூலமாக, தனி பட்டா பெறலாம்.
விடுவிப்பு பத்திரம்
ஒருவேளை கூட்டுப்பட்டாவில் பெயர் சேர்க்க வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட விற்பனை / பரிசு / வாரிசு ஆவணங்களை கொண்டு தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வழியாக பட்டா மாற்றம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வருவாய் துறையின் தாசில்தார் தான் அதிகாரம் உடையவர்."
கூட்டு பட்டாவில் ஒருவரின் பெயரை நீக்க வேண்டுமானால், அந்த நபரின் பதிவு செய்யப்பட்ட விடுவிப்பு பத்திரம் (Release Deed) அல்லது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், வருவாய் துறை (வட்டாட்சியர் / தாசில்தார்) அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications