தடுப்பூசி எப்படிப்பூ.... நம்ம தலைவர் வடிவேலு ஸ்டைலில்.. கிளைமேக்ஸ்தான் செம்ம ஹைலைட்! ஜாலி வீடியோ
சென்னை கொரோனா.தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரியாக்சன் என்ன? என்பதை :நம்ம தலைவர் வடிவேலு ஸ்டைலில் ஜாலியான வீடியோவில் பாப்போம்.
ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதை விட மீம்ஸ் வடிவில் நல்ல டெம்ப்ளேட்டில் சொன்னால் பலருக்கு போய் சேரும். அதை விஷயத்தை மிகவும் பிரபல நகைச்சுவை நடிகர்களின் முகபாவணைகளில் சொன்னால் பல லட்சம் பேருக்கு போகும்.
அதை மக்களும் விரும்பி பார்க்கிறார்கள், குறிப்பாக வடிவேலு பாணி டெம்பளேட்களில் தான் பல மீம்ஸ்கள் வருகின்றன. எத்தனை மீம்ஸ்கள் வந்தாலும் அது வடிவேலு ஸ்டைலில் இருந்தால் ரசிக்கும்படியாக இருக்கும். மீம்ஸ்கள் புகைப்படமாக இருந்த காலம் போய் வீடியோ வடிவிலும் உருவாகி பெரும் வரவேற்பை பெறுகின்றன,

பயப்படும் ஆன்டிபாடி
அப்படி வரவேற்பை பெற்ற ஒரு வீடியோவை ஐஏஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் பதிவிட்டுள்ளார் அதை இப்போது பார்ப்போம். உடலில் டம்மி கொரோனா செல் வரும் போது, எப்படி நோய் எதிர்ப்பு மண்டலங்கள் இருக்கும் என்பதையும், ஆன்டிபாடிகள் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கும் காட்சியுடன் வீடியோ ஆரம்பிக்கிறது.

பயப்பட தேவையில்லை
அடுத்த காட்சியில் எந்திரன் படத்தின் கோயில் காட்சியில் சிட்டி ரோபோவைப் போல் ஆவேசமாக டம்மி கொரோனா செல்கள் காட்சியளிப்பது போலவும், அதை பார்த்து நோய் எதிர்ப்பு மண்டலங்கள் பயந்து பின்னர் ஒன்றுமே இல்லையே என்று ஏமாறுவது போலவும் உள்ளது.,

அடிவாங்கும்
மூன்றாவது காட்சியில் காலம் மாறி போச்சு படத்தில் வலுவேலு பேசும் டையாலாக்கை உண்மையான கொரோனா தன் நண்பர் கரும் பூஞ்சையுடன் பேசுகிறது., அதாவது சகல என் அடியை பார்த்தது இல்லையே.. என்ன அடின்னு பாருங்க என்று கூறுகிறது. ஆவேசத்துடன் கொரோனா செல்கிறது.

தூக்கி போடுமிதி
நான்காவது காட்சியில் உள்ள போன கொரோனாவை, கோவை சரளா வலுவேலுவை தூக்கிப்போட்டு மிதித்து விடுகிறது. அடுத்தாக பாத்ரூமில் புகுந்ததால் அடிவாங்கி நொந்து போனவடிவேலு போல் கொரோனா சிக்கி ஆன்பாடியிடம் இன்னும் போகலயா நீ என்று மீண்டும் அடிவாங்கி ஓடுவதாக காட்சி உள்ளது,
|
செம்ம காட்சி
கடைசியில் கண்ணாயிரம் வெப்பன்ஸ எடு.. என்று வலுவேலு போக்கிரி படத்தில் சொல்வார். அப்படியே அசினிடம் என்னை எந்த டைரெக்சனில் வேண்டுமானாலும் தாக்குங்கள், எப்படி தடுக்கிறேன் பாருங்கள் என்பார். சொல்லி முடித்த அடுத்த நொடியே கட்டையால் ஓங்கி மொத்தமாக அடிப்பார்கள்.. மொத்தமாக சோலியை முடித்துவிடுவார்கள். ,இப்படியாக கொரோனாவின் கதையை தடுப்பூசிகள் போட்ட பின் உடல்கள் செயல்படுவதாக நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள். வீடியோவில் நீங்களே பாருங்கள்.












Click it and Unblock the Notifications