அந்த நொடி.. ஷவர்மா திடீரென பாய்சன் ஆவது எப்படி? என்ன நடக்கும்? இந்த அறிகுறிகள் வந்தால் ஆபத்து!
சென்னை: மக்கள் அதிகம் சாப்பிடும் ஷவர்மா திடீரென பாய்சனாக மாறுவது எப்படி? என்னதான் நடக்கிறது? என்று விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்!
Recommended Video
கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 16 வயதே நிரம்பிய தேவானந்தா என்ற மாணவி கசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் மறுநாளே பலியானார்.
அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த ஷவர்மா கடைகள் எல்லாம் மொத்தமாக மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ரெய்டு
இதையடுத்து தற்போது தமிழ்நாடு முழுக்க ஷவர்மா கடைகளில் தொடர் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ரெய்டில், 50 கிலோ கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல பிரியாணி கடைகளில் இருந்து இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இறைச்சிகளை பயன்படுத்திய கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மதுரையிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி கடுமையான சோதனைகளை செய்தனர்.

சோதனை
எங்கெல்லாம் ஷவர்மா கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரிகள் 52 ஷவர்மா கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 5 கடைகளில் பழைய சிக்கன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 10 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சில கடைகளில் பழைய மயோனைஸ் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இது இப்படி இருக்க ஒரத்தநாடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை பாதிப்பு
மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வயிறு பாதிப்பு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சரி இந்த ஷவர்மா இப்படி திடீரென பாய்சனாக மாறுவது எப்படி? என்னதான் நடக்கிறது? என்று விரிவாக பார்க்கலாம்! பொதுவாக ஷவர்மா என்று இல்லை.. கெட்டு போன எந்த உணவாக இருந்தாலும் அது உடல்நிலையை பாதிக்கலாம்.

கெமிக்கல்
அதேபோல் உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல், அதை சமைக்க பயன்படும் தண்ணீர் சுத்தம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களும் உடல் பாதிப்பை ஏற்படும். உணவுகளை மோசமான இடங்களில் வைப்பது அதியுள் வைரஸ் அல்லது கெட்ட பாக்டிரியா ஆகியவை உருவாக்கி காரணமாக அமையும். கெட்டு போன உணவுகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றில் இருந்து மூளை, நரம்பு மண்டலத்தை கூட பாதிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரளா மரணம்
கேரளாவில் இறந்த பெண்ணின் உடலில் shigella எனப்படும் பாக்டிரியா கிருமி இருந்ததாகவும், வயிற்றில் இது அதிகம் காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இந்த கிருமி அதிக நச்சுத்தன்மை கொண்டது. குடலை பாதித்து வேகமாக உடலில் பரவ கூடியது. ஷவர்மா கெட்டுப்போனதால் இந்த கிருமி உடலுக்குள் சென்று இருக்கலாம். அல்லது மோசமான தண்ணீர், கெட்டுப்போன மயோனைஸ் ஆகியவை சாப்பிட்டதால் கூட இது ஏற்பட்டு இருக்கலாம்.

அறிகுறிகள் என்ன
பொதுவாக ஷவர்மா சாப்பிட்ட பின் பின்வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
வாந்தி
தலை சுற்றல்
பேதி
வயிறு வலி
உடல் வலி
பசியின்மை
செரிமான பிரச்சனை
காய்ச்சல்
தலைவலி
மயக்கம்
மலத்தில் ரத்தம் செல்வது
மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை உணவு பாய்சன் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். ஷவர்மா சாப்பிட்டு இந்த அறிகுறிகள் வந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.

பாக்டிரியா
shigella பாக்டிரியா என்று மட்டுமில்லாமல் இன்னும் வேறு சில பாக்டிரியா கூட இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். Staphylococcus aureus, listeria monocytogenes, clostridium botulinum போன்ற பாக்டிரியாக்கள் உணவு பாய்ச்சனை ஏற்படுத்தும். உணவு மற்றும் சாலட்களில் இருக்கும் E Coli போன்ற பாக்டிரியாவும் உணவு பாய்ச்சனை ஏற்படுத்தும். கெட்ட தண்ணீர், சரியாக சமைக்காத அல்லது அதிகம் சமைத்த உணவு காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படலாம். இது போன்ற வைரஸ்கள் ஷவர்மாவில் சேரும் போது அது பாய்சனாக மாறும்.

வைரஸ்
அதேபோல் Norwalk, norovirus, sapovirus, rotavirus மற்றும் astrovirus போன்ற வைரஸ்கள் உணவில் காணப்பட்டாலும் அவையும் உணவு பாய்சனை ஏற்படுத்தும். இவை உடலில் வேகமாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உணவு பாய்சன் என்பது மயக்கம் தொடங்கி மரணம் வரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதே இதற்கு தீர்வு.

கவனிக்க வேண்டிய விஷயம்
உணவின் சுவை வித்தியாசமாக இருந்தால் சாப்பிட வேண்டாம்
ஷவர்மா சாப்பிடும் முன் அது புதியதா என்று சோதிக்கவும்
வெளியில் தண்ணீர் குடிக்கும் போது அது சுத்தமானதா என்று சோதிக்கவும்
ஷவர்மாவின் மயோனைஸ் சுத்தமாக இருக்கிறதா, புதியதா என்பதையும் சோதனை செய்யவும்
மசாலா பவுடர், கெமிக்கல் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, இவை நல்லதா என்றும் சோதிக்கவும்
அதேபோல் ஷவர்மா குறைவாகவோ அல்லது அதிகமாகவோ குக் செய்யப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்து கொள்ளவும்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications