சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் வந்துடுச்சே.. சென்னையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்.. திகைத்து நின்ற மக்கள்! மூச்சே விட முடியல

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. முக்கியமாக புறநகர் சென்னை பகுதியில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சமீபத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகளை தொடங்கியது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பொங்கல் வருது.. இந்த பக்கம் தமிழக அரசின் மேஜர் முடிவு.. இரவே பறந்து வந்த சூப்பர் ஆர்டர்! மக்கள் குஷி பொங்கல் வருது.. இந்த பக்கம் தமிழக அரசின் மேஜர் முடிவு.. இரவே பறந்து வந்த சூப்பர் ஆர்டர்! மக்கள் குஷி

சிறப்பு பேருந்து

சிறப்பு பேருந்து

சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

வீடுகள்

வீடுகள்

இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையில் சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு பேருந்து சேவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் நகர பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

பொங்கலுக்காக நாளையில் இருந்து பல அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சில அலுவலகங்களுக்கு இன்றில் இருந்தே விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் நேற்று இரவே சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் இவர்கள் திரும்பி சென்றனர். இதனால் சென்னையில் தாம்பரம், பெண்களத்தூர், காட்டாங்குளத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் நகர முடியாமல் கடுமையாக திணறின. சாலை முழுக்க கிட்டத்தட்ட 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. மூச்சு விட முடியாத அளவிற்கு வாகனங்கள் நெரிசலில் தவித்தன.

போலீஸ்

போலீஸ்

இங்கே போலீசார் பலர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தி வந்தனர். ஆனாலும் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இரவு 12 - 1 மணி வரை கூட போக்குவரத்து நெரிசல் நிலவியது. இன்றும் சிறப்பு பேருந்துகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அதிக அளவில் சாலைகளில் பேருந்துகள் செல்லும். இதனால் இன்றும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Huge traffice in Chennai and outskirts due to Tamil Nadu Pongal Special bus rush.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X