எனக்கு ஏதாவது நடந்துசுன்னா இயக்குநர் சுசி கணேசன் காரணம்.. லீனா மணிமேகலை ட்வீட்
சென்னை: தமக்கு ஏதாவது நிகழ்ந்தால் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன்தான் காரணம் என்று ஆவணப் பட இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு முழுவதும் #metoo விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் புகார்கள் #metoo மூலமாக முன்வைக்கப்பட்டது. இதில் பல பிரபலங்கள் பெயர்களும் அடிபட்டன.

லீனா மணிமேகலை புகார்
ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை, திருட்டுப் பயலே, கந்தசாமி திரைப்படங்களின் இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்திருந்தார். காரில் செல்லும் போது தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் சுசி கணேசன் என்பது லீனா மணிமேகலையின் புகார். ஆனால் இப்புகாரை சுசி கணேசன் மறுத்திருந்தார்.

சுசி கணேசன் வழக்கு
அத்துடன் லீனா மணிமேகலைக்கு எதிராக நீதிமன்றத்தில் சுசி கணேசன் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கி வைத்திருந்தது. இதனை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை ஒரு வாரத்தில் ஒப்படைக்கவும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மிரட்டுகிறார் சுசி கணேசன் என புகார்
இந்நிலையில் லீனா மணிமேகலை இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். லீனா மணிமேகலையின் ட்விட்டர் பதிவு: என்னால் பாலியல் அத்துமீறல் குற்றம்சாட்டப்பட்ட சுசி கணேசன், முதலில் நடிகர் சித்தார்த்தை மிரட்டினார். மீ டூ விவகாரத்தில் நடிகர் சித்தார்த் எனக்கு ஆதரவாக பேசியதால் சுசி கணேசன் மிரட்டினார். இதன் பின்னர் சுசி கணேசன், அவரது மனைவி ஆகியோர் நடிகை அமலாபாலை மிரட்டினர். நடிகை அமலாபால், சுசி கணேசன் மீது பாலியல் தொல்லை புகார் தெரிவித்திருந்தார்.

ஏதாவது நடந்தால்..
இதையடுத்து சுசி கணேசன், அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் எனது பாஸ்போர்ட்டை முடக்கினார் சுசி கனேசன். மேலும் நான் படித்து வரும் கனடா பல்கலைக் கழக நிர்வாகம், பேராசிரியர்களுக்கு புகார் அனுப்பி என்னுடைய மாணவர் விசாவை கேன்சல் செய்யவும் வைத்தார். இப்போது எனது வழக்கு குறித்த செய்திகளை எழுதுகிற பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களை மிரட்டி வருகிறார் சுசி கணேசன். நான் இப்போது பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் இருப்பதாக உணருகிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அது சுசி கணேசனால்தான் என்பதை பகிரங்கமாகவே தெரிவிக்கிறேன். இவ்வாறு லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications