நான் ஹிந்தி பேச மாட்டேன்.. ஹிந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது.. அண்ணாமலை அதிரடி பேட்டி
நான் இந்தி பேசமாட்டேன் என்றும் தமிழகத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நான் இந்தி பேசமாட்டேன் என்றும் தமிழகத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மு.க ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலை
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக ஏற்றுகொள்ளாது. 1965ல் காங்கிரஸ் கட்சி இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். 1986ல் 2வது தேசிய கல்வியில் மீண்டும் அதனை திணித்தார்கள்.

ஏ.ஆர்.ரகுமான்
இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்மொழி பள்ளிகளை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Recommended Video

புதிய கல்விக்கொள்கை
ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ஆம் வகுப்புவரை கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும் புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தது பாஜகதான். இங்கு எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்










Click it and Unblock the Notifications