என்கிட்ட ஆட்சி இருந்தா.. ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை புல்டோசர் மூலம் அகற்றிடுவேன்.. சீமான் ஆவேசம்!
சென்னை: தன்னிடம் ஆட்சி இருந்தால் ஒரே இரவில் புல்டோசர் மூலம் தமிழகத்தின் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
Recommended Video
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது .தமிழகத்தில் மட்டும் 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக்கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. எதிர்க்கட்சிகள் இப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ''தரமான சாலையில் பயணிக்க வேண்டுமானால், சுங்கச்சாவடிகளில் பணம் கட்டித்தான் ஆக வேண்டும்'' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருப்பது கடும் சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.

நிதின் கட்கரி
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று காலை நிருபர்களை சந்தித்தபோது, மத்திய அமைச்சர் நிதி கட்கரி கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த சீமான், '' நிதின் கட்கரி இதுபோல் பலமுறை கூறியுள்ளார். பிறகு எதற்காக சாலை வரி வாங்குகிறீர்கள்? நான் வைத்திருக்கும் காரின் விலை ரூ.21 லட்சம், ரூ.3 லட்சம் மட்டுமே சாலை வரிக்காக செலுத்தி இருக்கிறேன்.

சீமான் ஆவேசம்
ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது? அங்கு எத்தனை ஆண்டுகள் சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த விவரம் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஒரு 5 வருடம் மட்டும் ஆட்சியை என்னிடம் கொடுத்து பாருங்கள். புல்டோசர் மூலம் ஒரே இரவில் தமிழகத்தின் சுங்கச்சாவடிகளை அகற்றிவிடுவேன். என் மாநில சாலையை நான் பராமரித்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை. இதுதான் இங்கு பிரச்சினையே'' என்று சீமான் கூறினார்.

இங்கு ஆள் இல்லை
சுங்கச்சாவடிகள் தொடர்பாக மத்திய அரசை தட்டி கேட்பதற்கு இங்கு ஆள் இல்லை என்று சீமான் தமிழக அரசுக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுவது போல் பசி இருப்பது தி.மு.க தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் சீமான் தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசி வருவது தி.மு.க.வினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறியாது.

சீமானுக்கு தெரியாதா?
சுங்கச்சாவடிகளை பொறுத்தவரை அதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுக்கு இல்லை என்பது சீமானுக்கு தெரியாதா? என்று தி.மு.க உடன் பிறப்புகள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மாநகர, நகரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் தான் சுங்கச் சாவடி அமைக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் சென்னையை சுற்றி 5 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வசூல் செய்து வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை நிறுத்த தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயம் எல்லாம் சீமானுக்கு தெரியாதா? என்று பொங்குகின்றனர் தி.மு.க.வினர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
NTK Seeman: சட்டமன்றத் தேர்தலில் சீமான் ஜெயிப்பாரா? - பிரபல எண்கணித ஜோதிடர் கணிப்பு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications