இளையராஜா ரசிகர்களுக்கு ஸ்டாலின் குட்நியூஸ் ! 50 ஆண்டுகால திரை இசைப் பயணம் அரசு விழாவாக கொண்டாட்டம்!
சென்னை: 'இசைஞானி' இளையராஜாவின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகாலம்) கால திரை இசைப் பயணத்தை அரசு விழாவாக கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறப்புறும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் சிம்பொனியை கடந்த 8-ந் தேதி அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா. முன்னதாக இளையராஜாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா. மேலும் லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
இந்த பின்னணியில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற இளையராஜா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இளையராஜா நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வீடியோவை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இலண்டன் மாநகரில் Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! என்று அறிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் இசைஞானியின் பேரன்புக்குரிய ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகளும் குவிந்து வருகின்றன.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications