• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளையராஜா பாஜகவுடன்.. ஆமா, "2011" ஞாபகம் இருக்கா.. இதெல்லாம் தேவையில்லாதது.. சொல்றது யார்ன்னு பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: இளையராஜா பாஜக பக்கம் சென்றதால், திமுகவுக்கு நெருக்கடியா என்ற நம் கேள்விக்கு அக்கட்சியின் மனுஷ்யபுத்திரன் பதிலளித்துள்ளார்.

மக்களிடம் பெரும்பாலான ஆதரவை பெற்றவர்கள், அபிமானிகளாக இருப்பவர்கள், என இப்படிப்பட்ட பிரபலங்களுக்கு குறி வைத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.

வடமாநிலங்களில் இத்தகைய யுக்தியை பயன்படுத்தி, அதில் ஓரளவு அரசியல் லாபமும் அடைந்த நிலையில், தமிழகத்திலும் அதே ரூட்டை கையில் எடுத்தது..

"நம்பர் 1".. ஸ்டாலின் "லவ் டுடே" பார்த்தால் இவருக்கென்னவாம்.. எப்ப பார்த்தாலும்.. அட மனுஷ்யபுத்திரன்

 இளையராஜா

இளையராஜா

இதில் இளையராஜா சிக்கியதாக கூறப்பட்டது.. தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், திருமாவளவன் மட்டும்தான், இளையராஜாவுக்கு ஆதரவு தந்தார்.. "பாவம் இளையராஜா, சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களைச் சந்திப்பார்கள். இப்படித் தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன்' என்று திருமா பேசிய பிறகுதான், இந்த சர்ச்சை ஓரளவு குறைய தொடங்கியது.

திருமாவளவன்

திருமாவளவன்

எம்பியாக பதவி உங்கள் அரசியல் எத்து விளையாட்டுகளை அரசியல்வாதிகளோடு நேரடியாக நடத்திடுங்கள். படைப்பாளிகளை அதில் பகடைக்காயாக்காதீர்கள் என ஆர்எஸ்எஸ், பாஜகவை விமர்சித்து முரசொலியும் ஒரு கட்டுரையை அப்போது வெளியிட்டிருந்தது.எனினும், தற்போது எம்பியாக பாஜகவிலேயே ஐக்கியமாகிவிட்டார் இளையராஜா.. "புண்ணிய பூமியான காசியில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்று தோன்றிய பிரதமர் மோடியின் எண்ணத்தினைக் கண்டு வியந்து மகிழ்கிறேன்" என்று காசி நிகழ்ச்சியில், இளையராஜா பெருமையாக பேசியதையும், தமிழக மக்கள் கவனிக்கவே செய்தனர்.

 ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

இந்நிலையில், இளையராஜா மாதிரியான பொது ஆளுமைகள் பாஜக பக்கம் நிற்பது, திமுகவுக்கு நெருக்கடியாகாதா? என்று, மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனிடம் நாம் கேட்டோம்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு மனுஷ்யபுத்திரன் தந்த ஸ்பெஷல் பேட்டியில் இதுகுறித்து சொன்னதாவது: "இளையராஜாவால் ஒரு நெருக்கடியும் இங்கே இல்லை.. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாஜகவில் எம்.பி.யாகிறார் என்றே வைத்துக் கொள்ளுங்கள், உடனே கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாரும் பாஜகவுக்கு ஒட்டு போட்டுடுவாங்களா? கிடையவே கிடையாது..

 சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

அவரவர்க்கு தனிமனித விருப்பம் உள்ளது.. தமிழகத்திலும் அதே நிலைமைதான்.. சிவாஜி அரசியலில் இருந்தார்.. ஆனால், எம்ஜிஆர் போல ஏன், அவரால் ஜெயிக்க முடியவில்லை? ரஜினியால ஏன் இப்போது வரை வரவே முடியல? காரணம் என்னவென்றால், ஒருவரின் பிரபலத்தை வைத்துக் கொண்டு, ஓட்டுப்பெறலாம் என நினைப்பது, வெறும் கற்பனையே.. தமிழகத்தில் இதெல்லாம் ஒருபோதும் செல்லுபடியாகாது.. வடிவேலுவை எடுத்துக்கொள்ளுங்கள், தமிழகத்தில் எவ்வளவு பிரபலமான நடிகர்.. அவர் எங்களுக்காக 2011-ல் பிரச்சாரம் செய்தார்.. ஆனால், அந்த வருடம்தான் திமுக அடைந்த மிகப்பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது..

வடிவேலு

வடிவேலு

அவ்வளவு ரசிகர்களை பெற்றிருக்கும், வடிவேலு பேச்சை கேட்டுவிட்டு, ஏன் மக்கள் அப்போது ஓட்டு போடவில்லை? எனவே, இளையராஜாவை பொறுத்தவரை இசையின் மாமேதை.. அவரது பாட்டை வாழ்நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருப்பேன்.. மற்றபடி அவர் மேடையில் பேசுவது, அரசியல், இதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்.. ஒரு துறையில் மேதையாக இருப்பதால், மற்ற துறைகளிலும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது" என்றார்.

English summary
Ilayaraja: DMK is not affected by Ilayaraja's support for BJP, says IT wing cadre manushyaputhiran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X