70 ஆண்டுகளுக்கு பிறகு மூங்கில் இறால் உயிருடன் வந்த அதிசயம்! விலகிய மர்மம்.. ஆஹா, நம்ப முடியாத உண்மை
சென்னை: 70 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஒரு இனம், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. 70 ஆண்டுக்கு மாயமாகி போன மூங்கில் இறால் இனத்தை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.. பல்வேறு நன்னீர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடத்திய ஆய்வுகளின்போது இந்த இறால் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.. மூங்கில் இறால் என்பது என்ன? அதன் பண்புகள் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
ஒருகாலத்தில் நம்முடைய நாட்டில் காணப்பட்டதுதான் மூங்கில் இறால் இனம்... இத்தனை வருடங்கள் இது இந்தியாவில் இன்னும் வாழ்கிறதா இல்லையா என்றே விஞ்ஞானிகள் குழம்பிக்கொண்டிருந்தார்கள்.

நன்னீரில் வாழும் உயிரினம்
ஆனால் சத்யபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவானது, இது இன்னும் நம் நாட்டின் நதிகளிலேயே இருக்கிறது என்பதை தற்போது உறுதியாக சொல்லி உள்ளனர்.. ஆற்று நீர்ல வாழும் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்றவங்களுக்கு இது ஒரு வியப்புக்குரிய செய்தியாக அமைந்துள்ளது..
கர்நாடகா மற்றும் ஒடிசா நன்னீர் பகுதிகளில் இந்த உயிரி பிடிக்கப்பட்டுள்ளது.. இந்த ஆராய்ச்சியை டாக்டர் பிரகாஷ், ஆராய்ச்சி மாணவி குஞ்சுலட்சுமி, மங்களூரை சேர்ந்த மேக்லீன் ஆண்டனி ஆகியோர் சேர்ந்து செய்துள்ளார்கள்..
2 வருடங்களாக நதிக்கரைகள், ஓடைகள், மரக்கட்டைகள் கிடக்கும் இடங்கள், பசுமை நிறைந்த கரைகள் என ஒரு இடம் விடாமல் இவர்கள் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் இந்த பாம்பு இறால் கிடைத்துள்ளது..
மூங்கில் இறால் உயிருடன் வந்த அதிசயம்
ஒரு சின்ன மீன் மாதிரி இருக்குமாம் Atyopsis spinipes என்று சொல்லப்படும் இந்த மூங்கில் இறால்... இது சிறிய உயிரினம் என்றாலும், சாதாரணமானது கிடையாது..
இந்த மூங்கில் இறால் மத்த இறால்கள் மாதிரி கிடையாது.. ரொம்பவே விசேஷமானது... இதுக்கு முன்னங்கால்களில் விசிறி மாதிரி ஒரு அமைப்பு இருக்கும்.. 2 கைப்பகுதிகளிலுள்ள இந்த விசிறியை விரித்துதான் தண்ணீரில் பாயும், மிதக்கும்..
பண்புகள் - உடல் அமைப்புகள்
ஆனால் தண்ணீர் மட்டும் இதற்கு சுத்தமாக இருக்க வேண்டுமாம்.. காரணம், இந்த விசிறிகள் மிகவும் மெல்லியதாக இருக்கும்.. எனவே நல்ல நீரும், காற்றோட்டமும் இதற்கு தேவை. ஒருவேளை அசுத்தமான தண்ணீர் என்றால், இதற்கு நல்ல சாப்பாடு கிடைக்காது..
இதற்கு சாப்பாடு, சின்ன சின்ன துகள்கள்தான்.. இதையும் வடிகட்டிதான் சாப்பிடும்.. தூய்மையான தண்ணீரை பார்த்தாலே பாய்ந்துகொண்டு வேகமாக ஓடுமாம்.. சிறிய இடம் என்றாலும் நன்னீர் பகுதியாக இருப்பதே இந்த உயிரிக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், மூங்கில் இறால் இருக்கிற இடம் என்றாலே, அது சுத்தமான தண்ணீர் உள்ள இடம் என்று புரிந்து கொள்ளலாம்.
எப்போதுமே இந்த வகையான இறால் குஞ்சுகள், கடலில் அல்லது உவர் நீரில் பிறந்து வளர்ந்து, அதற்கு பிறகு சுத்தமான நன்னீருக்கு போய்விடுமாம்..
70 ஆண்டுகள்
இதற்கு முன்பு கடந்த 2022ல், ஒடிசாவில் மீன் வளர்க்கிற ஒருத்தர், ஒரு மூங்கில் இறாலை பார்த்ததாக சொல்லியிருந்தார்.. ஆனால், அதை தேடியும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான் விஞ்ஞானிகளின் தேடல் அதிகமாகிவிட்டது. பலவித தண்ணீரில் தேடி பார்த்து கிடைக்காதால், நன்னீர் பக்கம் தேடியிருக்கிறார்கள்.. அங்குதான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு இந்த மூங்கில் இறாலுக்கு வேறு பெயர் சொல்லப்பட்டதாம்.. பிறகுதான் இது Atyopsis spinipes என்கிற புதிய வகையை சேர்ந்தது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
விவசாய கழிவுகள், மருந்து கழிவுகள் உள்ளிட்ட எத்தனையோ காரணங்களினால் நதிநீர் கெட்டு வரும் இன்றைய சூழலில், மூங்கில் இறாலை மீண்டும் கண்டுபிடித்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது..
நதிநீர் பாதுகாப்பு அவசியம்
இன்னும் இந்த மூங்கில் இறால் போல எத்தனையோ உயிரினங்கள் நம்ம நாட்டில் மறைந்திருக்கலாம்.. எனவே ஆறுகளையும், நதிகளையும், ஏரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.. இல்லாவிட்டால் பல அரிய உயிரினங்களை நிரந்தரமாகவே நாம் இழந்துவிடுவோம் என்று அலர்ட் செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆக மொத்தம் சுமார் 70 ஆண்டுகளாக இந்திய விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருந்த ஒரு மர்மம் தற்போது விலகியுள்ளதும், காணாமல் போன மூங்கில் இறால் கண்டுபிடிக்கப்பட்டதும், பலரது கவனத்தை பெற்று வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications