புதுமுகங்கள் + மகளிரணியினர்! அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் எப்படி தயாராகிறது?
சென்னை: அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தையே இன்னும் முடிவடையாத நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.
முழுக்க முழுக்க புதுமுகங்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகளவில் சீட் கொடுக்கத் திட்டமிட்டுள்ள அதிமுக தலைமை அதற்கேற்றவாறு வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.
இதேபோல் மகளிரணி தரப்பில் இருந்து எந்த மாவட்டத்திலும் சலசலப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி இடப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், ஆளுங்கட்சியான திமுகவை களத்தில் முழு உத்வேகத்துடன் எதிர்க்கக் கூடிய நபர்களை வேட்பாளர்களாக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

வேட்பாளர் தேர்வு
பெரும்பாலும் புதுமுகங்களையும் குறிப்பாக இளைஞர்களையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தும் வகையில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறதாம். வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிய பிறகு அதில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது புகார்கள் எழாத வண்ணம் வேட்பாளர் தேர்வு இருக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமை ஏற்கனவே அறிவுரையும் வழங்கியிருக்கிறதாம்.

மகளிரணி
இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட பிறகு மகளிரணி தரப்பில் இருந்து சலசலப்புகள் எழுவது வழக்கம். எனக்கு சீட் கொடுக்கவில்லை என பல மாவட்டங்களில் மகளிரணி நிர்வாகிகள் போராட்டத்தில் குதிப்பார்கள். அது போன்ற நிகழ்வுகள் எதுவும் இந்தமுறை ஏற்படாதவாறு மகளிரணி நிர்வாகிகளுக்கும் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்குமாறு தலைமையிடம் இருந்து அட்வைஸ் சென்றிருக்கிறது.

எப்போது ரிலீஸ்?
பாஜகவுடனான பேச்சுவார்த்தை சிந்துபாத் கதையை போல் நாளுக்கு நாள் இழுபறியாகவே தொடர்ந்துகொண்டு செல்வதால், வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். தற்போதைய சூழலில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் என்ற பெயரில் அதிமுகவிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications