வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு: இனி ₹12 லட்சம் வரை வரி கட்ட வேண்டாம்! பட்ஜெட்டில் மெகா ஜாக்பாட்
சென்னை: புதிய வருமான வரி சட்டத்தில் டிஜிட்டல் முறை ஊக்குவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 60 ஆண்டு கால பழைய சட்டத்திற்கு மாற்றாக வரும் ஏப்ரல் முதல் அமலாகும் இந்த புதிய சட்டம் வரி தாக்கல் நடைமுறைகளை எளிமையாக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் இதுகுறித்து கூறுவது என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027 ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இந்திய வரி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, சுமார் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 1961 ஆண்டு வருமான வரி சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் 2025-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரி சட்டம்
இந்த புதிய சட்டம் வரும் ஏப்ரல் 1 தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பழைய சட்டத்தில் இருந்த 50 சதவீதத்திற்கும் அதிகமான கடினமான சட்ட பிரிவுகள் இதில் நீக்கப்பட்டு உள்ளன....
அதாவது சாதாரண குடிமக்களும் ஈஸியாக புரிந்து கொண்டு வரி தாக்கல் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் டிஜிட்டல் காலத்திற்கேற்ப வரி முறையை நவீனப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது..
வருமான வரி கிடையாதா
இந்த புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், வரி செலுத்துபவர்களை நீண்ட காலமாக குழப்பி வந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற இரண்டு வேறுபட்ட கால கட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.. அதற்கு பதிலாக வரி ஆண்டு என்ற ஒரே ஒரு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் வரி கணக்கிடும்போது ஏற்படும் தொழில்நுட்ப குழப்பங்கள் இனிமேல் இருக்க சான்ஸ் இல்லை.. அது மட்டுமல்லாமல், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகு கூட, தகுதியுள்ள நபர்கள் தங்களுக்கு வர வேண்டிய ரீபண்ட் தொகையை பெற்று கொள்ள புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. இது காலதாமதமாக வரி தாக்கல் செய்யும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது..
மத்திய அரசு - ரூ.7 லட்சம் சம்பளம்
வரி விதிப்பை பொறுத்தவரை, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டுமே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நடுத்தர வர்க்க மக்களுக்கு பலன் தரும் வகையில், சம்பளம் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் நிலையான கழிவு தொகை 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதிய வரி முறையை தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு, ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரி செலுத்த தேவை இல்லை என்ற சலுகையும் தொடர்கிறது.
சூப்பர் அப்டேட்
ஒட்டுமொத்தமாக இந்த புதிய சட்டம் வரி செலுத்துவோர் மற்றும் வரி துறை அதிகாரிகள் ஆகிய 2 தரப்பினருக்கும் சட்ட சிக்கல்களை பெருமளவு குறைக்கும். ஆவணங்களின் சுமையை குறைத்து, வெளிப்படையான வரி நிர்வாகத்தை உறுதி செய்வதே இதன் அடிப்படை இலக்கு ஆகும்..
வரி ஏய்ப்பை குறைக்கவும், வரி செலுத்தும் முறையை எளிதாக்கவும் இந்த புதிய சட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று வருமான வரி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..!!!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications