அன்புச்செழியனை விடாமல் துரத்தும் வருமான வரித்துறை.. இன்றும் சோதனை.. கிடுக்கிப்பிடி விசாரணை!
நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகளில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை: நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகளில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இன்று தொடர்ந்து வருகிறது. நேற்றும் நேற்று முதல் நாளும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால் இதில் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதனால் நேற்றே அங்கு சோதனை முடித்துக் கொள்ளப்பட்டது.
அதே சமயம் நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்திலும் , அதன் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் முடியவில்லை
ஆனால் அன்புச்செழியனின் வீடுகளில் இன்னும் சோதனை முடியவில்லை. அவர் வீடுகளில் நேற்று இரவு சோதனை நடந்தது. இன்று காலையும் மீண்டும் சோதனை தொடங்கி நடந்து வருகிறது. அவருக்கு சென்னை மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருக்கிறது. இரண்டு நகரங்களிலும் 22 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அன்புச்செழியனின் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

எங்கு
இதில் படத்தின் பைனான்சியர் அன்புச்செழியன் தன்னுடைய பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் இவர் பணம், ஆவணங்களை பதுக்கி வைத்து இருந்தார். இதுதான் வருமான வரித்துறை அவரை விடாமல் துரத்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறை சோதனையில் இவர் மறைத்து வைத்து இருந்த பத்திரங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7 பைகள்
இவரின் வீட்டில் இருந்துதான் கணக்கில் வராத 7 பைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 100 ரூபாய், 500 ரூபாய் கொண்ட கட்டுகள் இந்த பையில் இருந்துள்ளது. இவர் பிகில் படத்திற்கு முன்பே வரி ஏய்ப்பு செய்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் இவர் இதற்கு முன் பைனான்ஸ் செய்த படங்கள். அதற்கு அவர் வாங்கிய வட்டி எல்லாமும் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

எவ்வளவு பணம்
இன்றைய சோதனையில் அன்புச்செழியனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள், விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. பிகில் படம் மூலம் இவர் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், பென் டிரைவ்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரின் வீட்டில் இன்று முழுக்க வருமான வரி சோதனை நடக்கும். இன்று மாலை இது தொடர்பாக முக்கியமான வருமான வரித்துறை அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications