வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா!
டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நேற்று ஒரு இந்திய கப்பல் மும்பையை வந்தடைந்த நிலையில், இன்று ஷிவாலிக் மற்ரும் நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி சிக்கித் தவிக்கும் 24 கப்பல்களுக்கு இந்தியா பாதுகாப்பான பாதையை எதிர்நோக்கி வருகிறது.
இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92,700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும். இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில்தான், இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் கடந்த ஓரிரு நாட்களாக எல்பிஜி சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சரி செய்ய, ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. அதன் விளைவாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிக்கப்பட்டது.
பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 28 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த கப்பல்களில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 677 மாலுமிகள் உள்ளனர். கிழக்கே நிறுத்தப்பட்டுள்ள 4 கப்பல்களில் 101 இந்திய மாலுமிகள் உள்ளனர். இந்த கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?












Click it and Unblock the Notifications