எல்லாரும் போடுவாங்களே! தமிழ்நாடு வீரரை மோசமாக கிண்டலடித்த பாக். வீரர்.. காத்திருக்கும் அமில சோதனை!
சென்னை: இந்திய அணியில் ஆடி வரும் தமிழ்நாடு வீரர் ஒருவர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் வைத்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது. அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் நியூசிலாந்தை அடுத்த போட்டியில் இந்தியா வீழ்த்த வேண்டும். இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.

வருண்
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்திதான். இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்தார். மிஸ்ட்ரி ஸ்பின் பவுலர் என்பதால் இவரின் பவுலிங்கை கணிப்பது மிக மிக கடினம். அவ்வளவு எளிதாக இவரின் ஓவரில் ஆடி விட முடியாது. இதனால் எதிரணிக்கு இவர் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்டது.

பாகிஸ்தான்
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரின் ஆட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. 4 ஓவர் வீசிய இவர் 33 ரன்கள் கொடுத்தார். அதிலும் பாபர் அசாம் இவரின் ஒரு ஓவரில் 2 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை மாற்றினார். மற்ற பவுலர்களை விட வருண் நன்றாக அன்று பவுலிங் செய்து இருந்தாலும் கூட 33 ரன்கள் கொடுத்தது என்பது கொஞ்சம் மோசமான பவுலிங்தான்.

மிஸ்ட்ரி ஸ்பின்
இவர் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி நிலையில்தான் இப்படி சொதப்பினார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் வருண் சக்ரவர்த்தியை கிண்டல் செய்துள்ளார். அதில், வருண் சக்ரவர்த்தியின் மிஸ்ட்ரி ஸ்பின் பவுலிங் எங்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை. எங்களுக்கு இது பழக்கப்பட்ட பவுலிங்தான். ஆச்சர்யமாக இல்லை.

சல்மான் பட்
பாகிஸ்தானில் இருக்கும் தெரு கிரிக்கெட் வீரர்கள், சிறுவர்கள் கூட இப்படி பவுலிங் செய்வது வழக்கம். எல்லோரும் பாகிஸ்தானில் இப்படித்தான் பவுலிங் செய்வார்கள். இப்படித்தான் விரல்களை வைத்து பந்துகளை மாற்றி மாற்றி வீசுவார்கள். இதில் புதுமை எதுவும் கிடையாது என்று வருண் சக்ரவர்த்தியை சல்மான் கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video

ஆசிட் சோதனை
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் நன்றாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த போட்டி வருணுக்கு மிகப்பெரிய அமில சோதனையாக இருக்கும். நியூசிலாந்து போட்டியில் சரியாக பவுலிங் போடாத பட்சத்தில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக அஸ்வின், ராகுல் சாகர் போன்ற வீரர்கள் அணிக்குள் வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. வருண் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் அடுத்த போட்டியில் நன்றாக பவுலிங் செய்ய வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications