செஸ் ஒலிம்பியாட் எங்கள் நீண்ட நாள் கனவு.. நெகிழும் போட்டி நடுவர்கள்.. அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாக இந்திய செஸ் நடுவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரில் பங்கேற்க சர்வதேச செஸ் வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.

ஒத்திகை தொடக்கம்
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகைப் போட்டிகள் இன்று தொடங்கியது. இதனை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஒத்திகைப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை
இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு ஒத்திகைப்போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒத்திகை போட்டி நோபல் உலக சாதனையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இங்கு களத்திற்கு வந்துள்ளனர். இப்போட்டியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

கனவு நிறைவேறியது
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 4 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை, தமிழக அரசு 4 மாதங்களில் முடித்துள்ளது. இந்தியாவில் உள்ள செஸ் போட்டி நடுவர்கள் தங்கள் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேறியுள்ளதாக உணர்ச்சிப்பூர்வமாக தமிழ்நாட்டை பாராட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் செஸ் விளையாட்டை தமிழ்நாடு எடுத்து சென்றுள்ளது. எதிர்காலத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் ஒரு செஸ் போர்டு வைத்து குடும்பத்துடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாட வேண்டும்.
Recommended Video

இந்தியாவுக்கு பெருமை
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை போல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீச்சுடர், இந்தியாவின் 75 நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த தீச்சுடர் வரும் 27ம் தேதி மாமல்லபுரம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications