சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

500 போலி உறுப்பினர்! இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தேர்தல் முறையாக நடக்குமா? நீதிமன்றத்தில் வழக்கு!

Google Oneindia Tamil News

சென்னை : இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தேர்தலை முறையாக நடத்த கோரிய வழக்கில் பல் மருத்துவ சங்கம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய பல் மருத்துவக் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்பது குறித்து அந்த சங்கத்தில் உள்ள மருத்துவர்களிடையே பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மோர்பி பால விபத்து.. உயர்நீதிமன்றம் எழுப்பிய 'நறுக்' கேள்வி.. இதை கவனிச்சீங்களா? ப.சிதம்பரம் சுளீர் மோர்பி பால விபத்து.. உயர்நீதிமன்றம் எழுப்பிய 'நறுக்' கேள்வி.. இதை கவனிச்சீங்களா? ப.சிதம்பரம் சுளீர்

பல் மருத்துவ சங்கம்

பல் மருத்துவ சங்கம்

இது அந்த சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்களில் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள். இதனால் சங்கம் அரசியல் கட்சி சார்பாக நடந்து கொள்வது போல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

முறைகேடு

முறைகேடு

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர். அதனால் மீண்டும் இவர்களே பதவிக்கு வருவதற்கு போலி வாக்காளர்களை சேர்த்து வருகின்றனர்

 போலி உறுப்பினர்கள்

போலி உறுப்பினர்கள்

மேலும் வாக்காளர் பட்டியலில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலி உறுப்பினர்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தேர்தலுக்கு தடை கோராமல் உறுப்பினர் பட்டியலை சரிபார்த்து பொதுவான இடத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி சுரேஷ்குமார் பல் மருத்துவ சங்க மாநில பொறுப்பாளர்களை வருகின்ற 29ஆம் தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

தேர்தல் அலுவலர்

தேர்தல் அலுவலர்

இந்த சம்பவம் பல் மருத்துவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே தமிழக மருத்துவ சன் தேர்தல் தொடர்பாகவும் பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில், இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் தேர்தலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் அதே நேரத்தில் உறுப்பினர் பட்டியலில் சரிபார்த்து ஒரு பொதுவான இடத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
While the Madras High Court Judge has ordered the Dental Council of India to respond in the case of the Dental Council of India seeking proper conduct of the elections, there has been a demand to appoint an Election Commissioner to ensure that the elections are held fairly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X