வாழ்க இந்தியத் திருநாடு! வளர்க மானிட நேயம்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி கொண்டாடும் இந்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.

மதநல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் வகையில் அவர் இந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
''இந்தியத் திருநாடு, ஆன்மீகத்தில் முதன்மை பெற்றுத் திகழும் புண்ணிய பூமி. இங்குள்ளோர் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் திளைத்தவர்கள்.
அந்த உணர்வை உலகம் முழு வதும் பரப்ப இந்த திருநாளில் அனைவரும் முனைவோம். வாழ்க இந்தியத் திருநாடு, வளர்க மானிட நேயம்! எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.''
இதனிடையே இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும், தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோரும் தங்கள் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications