சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்தியாவின் ஒத்த கை.. மொத்தத்தையும் அப்படியே அள்ளி வந்த சென்னை சூப்பர் போலீஸ்!

பெருங்குடி கொலையில் சென்னை போலீஸ் சிறப்பாக செயல்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ

    சென்னை: சும்மா சொல்லக்கூடாது சென்னை போலீஸை... கொலை செய்த 15 நாளில் குற்றவாளியை பிடித்து கைது செய்தே விட்டார்கள்.

    கடந்த 20-ம் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் இறந்த சந்தியாவின் ஒரு கை, 2 கால்கள் மட்டும் கிடைத்தது. கால்களில் மெட்டி மட்டும்தான் இருந்தது.

    அதை வைத்து திருமணமானவர் என்று மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மற்றபடி கிடைத்த ஒரு வலது கையில் இருந்த பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் டிசைன் 2 டாட்டூக்கள்தான் போலீசாருக்கு கிடைத்த மொத்த ஆதாரமும்.

    3 தனிப்படைகள்

    3 தனிப்படைகள்

    கொலை செய்யப்பட்டது யார் என தெரியவில்லை, ஏன் என தெரியவில்லை, கொலையாளி யார் என்றும் தெரியவில்லை, பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் எங்கே போய் தேடுவது என்றும் புரியவில்லை. தனிப்படைகள் 3 அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கிருந்து இந்த விசாரணையை தொடங்குவது என்பதில் இருந்து போலீசாருக்கு சவாலாகவே இந்த கொலை இருந்தது.

    ஒரு கை, 2 கால்கள்

    ஒரு கை, 2 கால்கள்

    ஒரு கை, 2 கால்களை மட்டும் வைத்து கொண்டு போலீசார் எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தமிழக மக்களும் பரபரப்பிலும், எதிர்பார்ப்பிலும்தான் இருந்தனர். முதல் வேலையாக அந்த பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குப்பை எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.

    60 பெண்கள்

    60 பெண்கள்

    கோடம்பாக்கம், பவர்ஹவுஸ், வள்ளுவர்கோட்டம் பகுதிகளிலிருந்து குப்பைகளில் இந்த பார்சல் வந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக சென்னையில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தனர் போலீசார். அப்போதுதான் மொத்தம் 60 பெண்கள் காணாமல் போயிருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வந்தது.

    போஸ்டர்

    போஸ்டர்

    இதனால் இந்த கொலை தொடர்பாக போஸ்டர் அடித்து ஒட்டியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே கொலையுண்டவர் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று ஒரு க்ளூ கிடைத்துள்ளதாக சொல்லி தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

    போலீஸார் குழப்பம்

    போலீஸார் குழப்பம்

    இப்படித்தான் திணறி திணறி போலீசார் இந்த படுகொலையை கண்டுபிடிக்க துவங்கினார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தனர். 'போலீஸை குழப்ப வேண்டும் என்பதற்காகவே பெண்ணின் உடலை வெட்டி தனித்தனியாக வீசி எறிந்திருக்கிறார்கள்' என்று சந்தேகப்பட்டனர்.

    டாட்டூதான் காரணம்

    டாட்டூதான் காரணம்

    பெண்ணின் கையில் குத்தப்பட்டிருந்த சிவன், பார்வதியின் டாட்டூதான் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. டாட்டூக்கள் மட்டும் இல்லையென்றால் இந்த வழக்கை கண்டுபிடித்திருப்பது இன்னும் கஷ்டமாகி இருக்குமாம். அதுவும் உடல்களின் பாகங்கள் ஒவ்வொரு இடத்திலும் வீசப்பட்டிருப்பதாக கொலையாளி சொன்னதும், தென்சென்னை போலீசார் நேற்று முழுவதும் பிஸியாகிவிட்டனர்.

    சபாஷ் போலீஸ்!!

    சபாஷ் போலீஸ்!!

    முழு வீச்சாக இறங்கி ஒரு சில பாகங்களை அழுகிய நிலையில் கைப்பற்றினார்கள். இன்னும் விசாரணை போய் கொண்டுதான் இருக்கிறது. மொத்த விசாரணையும் முடிந்தபிறகு போலீசார் இதுகுறித்து விளக்கமாகவே நமக்கு சொல்வார்கள் என்றாலும், இந்த 2 வாரங்களில் ஒத்த கையை வைத்து கொண்டு ஒட்டுமொத்த கொலையையும் கண்டுபிடித்த நம் பள்ளிக்கரணை போலீசாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    English summary
    Chennai police have done well in the Perungudi Woman Murder Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X