அசத்தல்! இனி பாலுக்காக அதிகாலையில் எழ வேண்டாம்! 3 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆவின் 'டிலைட்'
சென்னை : 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குளிர்சாதன வசதியின்றியும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
தமிழக அரசின் பால்வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் பெருகி விட்டாலும், தற்போது கூட சென்னை போன்ற நகர் பகுதிகளில் ஆவின் பால் இல்லையென்றால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் இன்னல்களை சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆவின் பால்.

ஆவின் பால்
உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் ஆவின் நிலையங்களில் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகியவை ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆரஞ்சு, நீலம், பச்சை, பழுப்பு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சமன்படுத்திய பால், ஆவின் டயட், நிலைப்படுத்தப்பட்ட பால், கொழுப்பு செறிவூட்டப்பட்ட பால் என பல்வேறு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய வகை பால்
இது மட்டுமல்லாமல் ஆவின் நெய், பன்னீர், வெண்ணெய், இனிப்பு வகைகள் என பால் பொருட்களும் ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாகவும் முகவர்கள் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய வகை பால் ஒன்றினை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆவின் டிலைட்
ஆவின் டிலைட் என்ற பெயரில் மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக பசும்பாலை தான் தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய வடிவத்தில் பச்சை நிறத்தில் ஆவின் டிலைட் பாக்கெட்டுகள் 500 மில்லி என்ற அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் கூட 90 நாட்கள் வரை வைத்து இந்த பாலை பயன்படுத்தலாம் என்பதுதான். தற்போது அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாக்டீரியா இல்லை
நீண்ட தூரப் பயணம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த வகை பால் பாக்கெட் பெரிய அளவிலான பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாலுக்காக மக்கள் இன்னல் படுவது தவிர்க்கப்படும் எனவும் பால் பவுடரை விட இந்த பாலை பயன்படுத்துவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 3.5 சதவீத கொழுப்பு மற்றும் ஜீரோ சதவீத பாக்டீரியா உடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவின் டிலைட்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications