• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இது மோசமான அறிகுறி".. மைதானத்தில் அதிர்ச்சி தந்த இளம் தமிழக வீரர்.. இதை நோட் பண்ணீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக ஆடினார். ஆனாலும் மைதானத்தில் இவருக்கு நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றது. பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் நன்றாக ஆடிய கொல்கத்தா 16வது ஓவரில் வெற்றிபெற வேண்டிய போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று திரில்லாக வென்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

கேகேஆர் அல்லது டெல்லி.. எந்த டீம் பைனலுக்கு வந்தால் சிஎஸ்கே ஈஸியாக வெல்லலாம்? இவ்வளவு விஷயம் இருக்கே கேகேஆர் அல்லது டெல்லி.. எந்த டீம் பைனலுக்கு வந்தால் சிஎஸ்கே ஈஸியாக வெல்லலாம்? இவ்வளவு விஷயம் இருக்கே

வருண்

வருண்

நேற்று போட்டியில் கொல்கத்தா அணியின் இளம் பவுலர் வருண் சக்ரவர்த்தியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. நேற்று முதல் பந்திலேயே ப்ரித்வி ஷா விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி எடுத்தார். அதன்பின் இன்னொரு ஓப்பனிங் வீரரான தவான் விக்கெட்டையும் வருண்தான் எடுத்தார். கொல்கத்தா அணிக்கு இந்த தொடர் முழுக்கவே வருண் முக்கியமான வீரராக திகழ்ந்து இருக்கிறார்.

வருண் முக்கியம்

வருண் முக்கியம்

கொல்கத்தா அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்து, அணியை வெற்றிபெற வைத்ததில் வருண் சக்ரவர்த்தியின் பங்கு முக்கியமானது ஆகும். ஆனால் இந்த சீசனில் அவர் காலில் காயத்தோடுதான் ஆடினார். அவருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு தினமும் அதிகமாக வலி ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

  அவுட் ஆனதும் Dinesh Karthik செய்த செயல்.. என்ன தண்டனை கிடைக்கும் ? | Oneindia tamil
  ஆடலாம்

  ஆடலாம்

  ஆனாலும் ஆட கூடிய நிலையில் இருப்பதால் வலிக்கு மட்டும் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டு வருண் சக்ரவர்த்தி ஆடிக்கொண்டு இருக்கிறார். கொல்கத்தா அணி நிர்வாகமே, அவர் கடுமையான வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை மிக மிக கவனமாகவே ஆட வைத்துக்கொண்டு இருக்கிறோம். அவர் எதிர்காலத்தில் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 100 சதவிகிதம் அவர் பிட்டாக இருக்க வேண்டும் என்றால் அவர் நீண்ட காலம் ரீஹாப் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

  கவனம்

  கவனம்

  இந்திய டி 20 உலகக் கோப்பையில் அவர் ஆட வேண்டும். இதனால் அவரை கவனித்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தது. ஆனால் நேற்று ஆட்டத்தின் போது இவருக்கு திடீரென காலில் எதோ பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தின் இறுதியில் கொஞ்சம் மைதானத்தில் நொண்டியபடி பெவிலியனுக்கு சென்றார். இதனால் இவர் பெரிய அளவில் பீல்டிங் செய்யவில்லை. நொண்டியபடியே இவர் பெவிலியன் சென்றது அதிர்ச்சி அளித்தது.

   நோட் பண்ணீங்களா

  நோட் பண்ணீங்களா

  இவர் மைதானத்தில் நொண்டியபடி சென்றதை நெட்டிசன்கள் பலர் பார்த்துவிட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். வருணுக்கு கால் வலி அதிகமாக இருந்தால் அவரை வைத்து கொல்கத்தா அணி ரிஸ்க் எடுக்க கூடாது. வருணை நம்பித்தான் இந்திய டி 20 உலகக் கோப்பை அணி உள்ளது.. இவர் இப்படி நொண்டுவது மோசமான அறிகுறி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் தற்போது டி 20 உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேல் இடம்பெறவில்லை.

  அக்சர் பட்டேல்

  அக்சர் பட்டேல்

  அதேபோல் அணியில் இருக்கும் ராகுல் சாகர், அஸ்வின் முழு பார்மில் இல்லை . ஜடேஜா முழு நேர ஸ்பின் பவுலர் கிடையாது. இதனால் இந்திய அணி வருண் சக்ரவர்த்தியைதான் அதிக அளவில் நம்பி இருக்கிறது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கு முன் இவரின் காயம் மோசமடையாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

  English summary
  IPL 2021: What happened to Varun Chakravarthy, Why was he imping in yesterday match? The Indian team relies heavily on Varun Chakraborty. Fans have been demanding that his injury should not get worsen before the World Cup series.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X