சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அதே" டீம்தான் வேண்டும்.. கடைசி வரை பொறுத்திருந்து.. ஐபிஎல் ஏலத்தில் ஸ்மார்ட் கேம் ஆடும் சிஎஸ்கே!

Google Oneindia Tamil News

சென்னை: 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான திட்டம் ஒன்றுடன் ஏலம் எடுத்து வருவதாக தெரிகிறது.

2022 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பல இளம் வீரர்கள் எதிர்பார்க்காத விலைக்கு ஏலம் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இஷான் கிஷான் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்கு ஏலம் சென்றுள்ளார். 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் தீபக் சாகர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஐபிஎல் Host.. திடீரென மயங்கி விழுந்தது எப்படி? யார் இந்த ஹக் எட்மைட்ஸ்? நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஐபிஎல் Host.. திடீரென மயங்கி விழுந்தது எப்படி? யார் இந்த ஹக் எட்மைட்ஸ்?

இஷான் கிஷான்

இஷான் கிஷான்

இஷான் கிஷான் சிறந்த ஓப்பனிங் வீரர். அணியின் கேப்டன்சி மெட்டீரியல். அதேபோல் கீப்பர். இதனால் அவருக்கு கடும் போட்டி இருந்தது. தீபக் சாகர் சிறந்த பவர் பிளே பவுலர். அதோடு சிறப்பாக பேட்டிங்கும் செய்து வருகிறார். கடந்த 6 மாதமாக பல தொடர்களில் இவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனால் இவரை சிஎஸ்கே விட்டுக்கொடுக்காமல் எடுத்துள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அதே பழைய டீமை எடுப்பதற்காக முயன்றது. தோனியின் கடைசி சீசனாக இது இருக்க வாய்ப்பு உள்ளதால் அதே டீமை மீண்டும் எடுக்க முயன்றது. அதன்படியே ராபின் உத்தப்பாவை 2 கோடிக்கு எடுத்தது. தீபக் சாஹரை போராடி 14 கோடி ரூபாய்க்கு எடுத்தது. முதலில் தீபக் சாஹரை எடுக்காதது போல சிஎஸ்கே இருந்தது.

சாஹர்

சாஹர்

மற்ற அணிகளின் விருப்பம் எவ்வளவு என்று சோதித்தது. அதன்பின் 11 கோடி வந்த பின் சாஹரை ஏலம் கேட்டது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி இவரை எடுக்க போராடினாலும் 14 கோடி வரை தைரியமாக சென்று சிஎஸ்கே இவரை எடுத்தது. கடைசி வரை பொறுத்திருந்து இவரை சிஎஸ்கே எடுத்தது. அதேபோல் ராயுடுவை ஹைதராபாத் அணியோடு போட்டி போட்டு 6.75 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்தது.

பிராவோ

பிராவோ


பிராவோவையும் 4.40 கோடிக்கு ஹைதராபாத் அணியோடு போராடி சிஎஸ்கே எடுத்தது. இதில் சிஎஸ்கே விட்டுக்கொடுத்தது டு பிளசிஸ் மட்டுமே. ஆனால் அவரும் கூட பெங்களூர் அணியில் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஐபிஎல் அணிகள் வேறு ஒரு அணியின் வீரரை எடுத்து கேப்டனாக்க முயன்றால் அதற்காக உள்ளே கோரிக்கைகள் வைக்கும்.. அதாவது விட்டுக்கொடுக்கும்படி கோரிக்கைகள் வைக்கும்.

டு பிளசிஸ்

டு பிளசிஸ்

அப்படித்தான் சிஎஸ்கே டு பிளஸிஸை பெங்களூருக்கு விட்டுக்கொடுத்து இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இவருக்கு பதிலாக ஒப்பனராக டி காக், வார்னர், படிக்கல் ஆகியோரை எடுக்க முயன்று சிஎஸ்கே தோற்றது குறிப்பிடத்தக்கது. மற்றபடி கோர் வீரர்களை மீண்டும் சிஎஸ்கே எடுத்துவிட்டது. ரெய்னா இன்று எடுக்கப்படவில்லை என்றாலும் நாளை மீண்டும் அடிப்படை விலையில் எடுக்கப்படலாம்.

Recommended Video

    #IPLMegaAuction2022: அதிக தொகைக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ்... டூ பிளசிஸ்சை நழுவவிட்ட சிஎஸ்கே!
    அதே டீம்

    அதே டீம்

    சாஹரை போலவே ஷரத்துல் தாக்கூரையும் சிஎஸ்கே எடுக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது.ஆனால் அவரை சிஎஸ்கே எடுக்கவில்லை. காலையில் இருந்து சிஎஸ்கே பொறுத்திருந்ததற்கு காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது. பொறுமையாக இருந்து கடைசியில் தேவையான அதே வீரர்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே மீண்டும் 99% பழைய அணியோடுதான் இந்த தொடரில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    IPL 2022: CSK almost got back it core team in this auction with few changes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X