உங்களை எடுக்க முடியாது.. கேப்டனுக்கே தகவல் அனுப்பிய ஐபிஎல் அணி- ரீடெயினில் நடக்க போகும் செம ட்விஸ்ட்
சென்னை: 2022 ஐபிஎல் போட்டிகளுக்கான ரீடெயின் லிஸ்ட் தயார் செய்யும் பணிகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு அணிக்கும் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவிற்கு வந்துவிட்டது.
இன்று பிற்பகலோடு அணிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது. ரீடெயின் செய்யப்பட வேண்டிய வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
இந்த நிலையில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் எந்தெந்த அணிகள் யாரை எல்லாம் ரீடெயின் செய்துள்ளன என்று அறிவிக்கப்படும். கிட்டத்தட்ட இந்த லிஸ்ட் ஏற்கனவே கசிந்துவிட்டது என்பது வேறு விஷயம்.

4 வீரர்கள்
ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்களை ரீடெயின் செய்ய முடியும் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில அணிகள் மெகா ஏலத்திற்காக காத்து இருக்கின்றன. இதனால் 4 வீரர்களை ரீடெயின் செய்யாமல் சில அணிகள் 1-2 வீரர்களை மட்டுமே ரீடெயின் செய்கிறது.

ரீடெயின்
உதாரணமாக ஹைதராபாத் அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரீடெயின் செய்ய உள்ளது. கேன் வில்லியம்சன் மட்டுமே அந்த அணியால் ரீடெயின் செய்யப்படுவார். அதேபோல் பஞ்சாப் அணியில் யாருமே ரீடெயின் செய்யப்பட போவதில்லை. இதேபோல் மற்ற சில அணிகளிலும் குறைவான வீரர்கள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் கொல்கத்தா
கொல்கத்தா அணி இந்த நிலையில் இயான் மோர்கனை ரீடெயின் செய்ய போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரு ரசல் ஆகியோரை ரீடெயின் செய்ய உள்ளது. மாறாக இயான் மோர்கனை ரீடெயின் செய்ய வேண்டாம் என்று கொல்கத்தா அணி முடிவு செய்துள்ளது.

இயான் மோர்கன்
கொல்கத்தா அணி நிர்வாகம் இயான் மோர்கனை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 2021 சீசனில் சிறப்பாக கேப்டன்சி செய்தும் இயான் மோர்கனை கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றி விட முடிவு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி இந்த முறை புதிய கேப்டனை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஐபிஎல்லில் புதிய திருப்பமாக அமையும். அதேபோல் இயான் மோர்கனை மற்ற அணிகள் ஏதாவது கேப்டனாக ஏலம் எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன.