Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இப்படி? லிஸ்டில் பெயரை கூட தராத சிஎஸ்கே.. ரெய்னாவிற்கு நடந்தது என்ன? பின்னணியில் வேறு காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி உள்ளிட்ட எந்த அணிகளும் 2022 ஐபிஎல் ஏலத்தில் அதிரடி வீரர் ரெய்னாவை எடுக்கவில்லை.

Recommended Video

    Raina-விற்கு நடந்தது என்ன? பின்னணியில் வேறு காரணம்? | IPL Auction 2022

    ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து அதில் கிங்காக வலம் வந்தவர். 2020 ஐபிஎல்லில் ஆடாமல் வெளியேறியதற்கு முன்பு வரை ரெய்னாதான் ஐபிஎல்லில் அதிக ரன் அடித்த டாப் ஸ்கோர் வீரர்.

    மிஸ்டர் ஐபிஎல் என்ற பட்டதோடு வலம் வந்த டாப் வீரர் இவர்தான். 2018ல் கூட சிஎஸ்கே அணியின் இரண்டாவது ரீ டெயின் ஆப்ஷனாக இருந்தவர்தான் ரெய்னா.

    ரெய்னா

    ரெய்னா

    ரெய்னா சிஎஸ்கே அணியின் பந்தத்தை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாது. பல போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக வெற்றியை தேடிக்கொடுத்தது ரெய்னாதான். முக்கியமாக செமி பைனல், பைனல் போட்டிகள் பலவற்றில் ரெய்னா சிஎஸ்கேவை கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீட்டு வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ரெய்னா இந்த முறை சிஎஸ்கே அணியால் எடுக்கப்படவில்லை.

    ஏலம்

    ஏலம்

    கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஏலத்தில் ரெய்னாவை சிஎஸ்கே எடுக்கவில்லை. முதல் நாளில் எடுக்கவில்லை என்றாலும் இரண்டாவது நாளில் மீண்டும் பட்டியலிடும் போது ரெய்னாவை சிஎஸ்கே எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான இரண்டாவது விருப்பப் பட்டியலை அணிகள்தான் அளிக்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே அணி அந்த பட்டியலில் கூட ரெய்னா பெயரை தரவில்லை. வேறு எந்த அணிகளும் அவரின் பெயரை அளிக்கவில்லை.

    ரெய்னா

    ரெய்னா

    இதனால் இரண்டாவது முறை ரெய்னா ஏலத்திற்கு வராமலே புறக்கணிக்கப்பட்டார். இதை பற்றி சிஎஸ்கே எதுவும் சொல்லவில்லை.அவரை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட சிஎஸ்கே அணி எடுக்க முன் வராமல் போனது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கையில் கிட்டத்தட்ட 6 கோடி மீதம் இருந்தும் சிஎஸ்கே இவரை எடுக்காதது ஏன் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பின் பல யூகங்களும் பரபரப்பட்டு வருகின்றன.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    ரெய்னா சிஎஸ்கே உறவில் இதுவரை என்ன நடந்தது என்று பார்க்கலாம். சிஎஸ்கே அணிக்கும் ரெய்னாவிற்கும் இடையே கடந்த 2020 ஐபிஎல் சீசனில் மோதல் ஏற்பட்டது. ரெய்னா தனது உறவினர்கள் கொலை செய்யப்பட்டதால் சீசனுக்கு முன்பாக வெளியேறினார். ஆனால் அதே சமயம் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களுடன் ரெய்னா மோதியதாகவும் கூறப்பட்டது. பால்கனி அறை கிடைக்காத காரணத்தால் ரெய்னா சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதியதாக கூறப்பட்டது.

    மோதல்

    மோதல்

    ஆனால் உண்மையில் இப்படி ஒரு மோதல் நடந்ததா என்பதே சந்தேகம்தான். இந்த மோதலின் போது சிஎஸ்கே அணி ஓனர் ஸ்ரீநிவாசன் ஒருமுறை ரெய்னாவை விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அவருக்குதான் இதனால் பொருளாதார இழப்பு. எங்களுக்கு இல்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த பிரச்சனை எல்லாம் சரியாகி கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் ரெய்னா சிறப்பாக ஆடினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் ரெய்னாவிற்கு காயம் ஏற்பட்டது.

     காயம்

    காயம்

    கடைசி 3 போட்டிகளில் இதனால் ரெய்னா ஆடவில்லை. அவரின் காலில் மோசமான காயம் இருந்தது. அதோடு 3 வருடமாக ரெய்னா முதல் தர போட்டிகளில் ஆடவில்லை. சையது முஸ்தாக் போட்டியில் கூட ஆடவில்லை. மேலும் 3 வருடமாக ரெய்னா பெரிய அளவில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இதனால் ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் புறக்கணித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு சிஎஸ்கேவில் இந்த முறை ராஜவர்தான் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே இவரை புறக்கணித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியை தேர்வு செய்யும் விதமாக சிஎஸ்கே ரெய்னாவை கழற்றி விட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதான் காரணமா இல்லை பின்னணியில் வேறு காரணம் இருக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது. இருப்பினும் சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா தோனியுடன் இணைந்து சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்ற எதிர்ப்பு நிறைவேறாமல் போய் உள்ளது.

     ரெய்னா பிளான்

    ரெய்னா பிளான்

    இதையடுத்து ரெய்னா என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை ஏலத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி மீதம் உள்ள காசை கொடுத்து எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாதபட்சத்தில் சிஎஸ்கே அணியில் இவருக்கு வேறு விதமான பயிற்சி பணிகள் வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் குஜராத் அணியில் இவர் இருந்தவர் என்பதால் அங்கு இவருக்கு அணி ரீதியான பணிகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+