அந்த கசப்பான மோதல்.. "மிஸ்டர் ஐபிஎல்" ரெய்னாவிற்காக கையை கூட தூக்காத சிஎஸ்கே.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் ரெய்னாவை சிஎஸ்கே அணி இந்த முறை ஏலம் எடுக்கவில்லை.

2022 ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே அணி இதுவரை பிராவோ, உத்தப்பா ஆகியோரை மீண்டும் எடுத்துள்ளது.

டு பிளஸிஸை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முடியவில்லை. பெங்களூர் அணி டு பிளஸிஸை 7 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

ரெய்னா

ரெய்னா

இந்த முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரெய்னாவை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை. சிஎஸ்கே அணிக்காக பல வருடம் ஆடியவர் என்றாலும் ரெய்னாவை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை. அதேபோல் தற்போது ஏலத்திலும் சிஎஸ்கே அணி ரெய்னாவை எடுக்க முயற்சி செய்யவில்லை. ரெய்னா அதிகபட்சம் இன்னும் 1 வருடம் ஆடுவார். அல்லது 2 வருடம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி

தோனி

அதேபோல் தோனி ஓய்வு பெறும் போது ரெய்னா அவருடன் சேர்ந்து சிஎஸ்கே அணியில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரெய்னாவிற்கும் சிஎஸ்கேவிற்கும் உணர்வுபூர்வமான பந்தம் உள்ளது. இரண்டு பேருமே சிஎஸ்கே அணியில் இருந்தபடி ஓய்வு பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி இந்த முறை ரெய்னாவை எடுக்க எந்த ஆர்வமும் காட்டவில்லை. மற்ற அணிகள் யாரும் ரெய்னாவை எடுக்க விரும்பவில்லை.

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

இதனால் ரெய்னாவை சிஎஸ்கே அணி அடிப்படை விலையான 2 கோடிக்கு எடுத்து இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே அதற்கு கூட கையை தூக்கவில்லை. சிஎஸ்கே அணிக்கும் ரெய்னாவிற்கும் இடையே கடந்த 2020 ஐபிஎல் சீசனில் மோதல் ஏற்பட்டது. ரெய்னா தனது உறவினர்கள் கொலை செய்யப்பட்டதால் சீசனுக்கு முன்பாக வெளியேறினார். ஆனால் அதே சமயம் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களுடன் ரெய்னா மோதியதாகவும் கூறப்பட்டது.

மோதல்

மோதல்

பால்கனி அறை கிடைக்காத காரணத்தால் ரெய்னா சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதியதாக கூறப்பட்டது. சிஎஸ்கே சிஇஓ காசி விசுவநாதன் ஒருமுறை ரெய்னாவை விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பிரச்சனை எல்லாம் சரியாகி கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் ரெய்னா சிறப்பாக ஆடினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் ரெய்னாவிற்கு காயம் ஏற்பட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

அவருக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. பெரிய பார்மில் ரெய்னா இல்லை. அதேபோல் உள்ளூர் போட்டிகளில் 2 வருடமாக ஆடவில்லை. இதனால் சிஎஸ்கே அவரை இந்த முறை எடுக்கவில்லை. ஏலம் முடிந்து மீண்டும் மீதம் உள்ள வீரர்கள் ஏலம் விடப்படும் போது இருக்கிறதா காசை வைத்து ரெய்னாவை சிஎஸ்கே எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+