‘இரவின் நிழல்’ ஒரே ஷாட் நான் லீனியர் இல்லை! சர்ச்சை கிளப்பிய ப்ளூ சட்டை! பதிலடி கொடுத்த பார்த்திபன்!
சென்னை : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை எனவும், ஏற்கனவே ஒரு ஈரானிய படம் அப்படி வந்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்த நிலையில், அவர் சொல்லும் படம் நான் லீனியர் வரிசையில் இல்லை எனவும், இன்னும் அவர் மீது மரியாதை இருக்கிறது என பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் போனவர் என மட்டுமல்லாமல் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தமிழ்க் கலைஞர் பார்த்திபன். இவர் தற்போது இரவின் நிழல் என்ற உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை தமிழுக்குக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் பார்த்திபன் தனது நீண்ட கால உழைப்பை கொட்டி எடுத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக தனது வாழ்க்கையில் அதிகாலை காட்சியை பார்த்ததே இல்லை என்று உருகிப் பேசினார் பார்த்திபன்.

இரவின் நிழல்
பார்த்திபன் மட்டுமல்லாது வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பும் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் அருமையான படம் எனவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில், விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்," இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான Fish and Cat திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்றும் அந்த படத்தின் நீளம் 134 நிமிடங்கள்" என பதிவிட்டிருந்தார். இதனிடையே ப்ளு சட்டை மாறன் சொல்லும் படம் நான் லீனியர் வரிசையில் இல்லை எனவும் இன்னும் அவர் மீது மரியாதை இருக்கிறது என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் அறிவுஜீவி இல்லை !
இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை இப்படத்தை 'the world's first non-linear shot movie' என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன்.

இன்றும் மரியாதயே!
அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே!" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என பலரும் பார்த்திபனின் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications