லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்கிறதா? மத்திய அரசு அனுப்பிய சர்க்குலர்.. திமுக பிடித்த பாயிண்ட்
சென்னை: நாடாளுமன்றத்தில் தற்போது நடக்கும் கூட்டத்தொடர் சிறப்பு கூட்டத்தொடர் கிடையாது, நேற்று அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் இது ஒரு சாதாரண அமர்வு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது என்று எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார். திமுக எம்பியின் இந்த பேட்டி காரணமாக லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவாதம் எழுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது டெல்லியில் தொடங்கி உள்ளது. இன்று முதல் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்திற்கு நாம் விடை கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு இந்தியரின் வியர்வையாலும், பணத்தாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது. மேற்கத்திய நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் இந்தியா பாலமாக திகழ்கிறது.
இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்துள்ளது. ஜி20 மாநாட்டின் மூலம் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாட்டினால் விடையளிக்கப்பட்டுள்ளது
நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும், பெண் எம்பிக்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது, என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தற்போது நடக்கும் கூட்டத்தொடர் சிறப்பு கூட்டத்தொடர் கிடையாது, நேற்று அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் இது ஒரு சாதாரண அமர்வு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது என்று எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், நாங்கள் இன்னும் இருளில்தான் இருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் திடீரென நடப்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு அமர்வு தேவை இல்லை.நேற்று அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் இது ஒரு சாதாரண அமர்வு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நடக்கிறது என்று ஊகிக்கலாம்.
நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் என்ன இருக்கிறது என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை என்று எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார். திமுக எம்பியின் இந்த பேட்டி காரணமாக லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவாதம் எழுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.
நடக்கும் கூட்ட தொடர் குளிர்கால கூட்ட தொடரின் முன்கூட்டிய கூட்டத்தொடர் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக டிசம்பரில் தேர்தல் நடக்கும் வாய்ப்புகள் இருப்பதால் டிசம்பரில் நடக்க வேண்டிய கூட்ட தொடர் இப்போது நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
எதிர்பக்கம் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி இணைந்து வலிமை அடைந்து வருகின்றன.
இந்தியா கூட்டணி அச்சம்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கடந்த ஏழு மாதங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதை சிலர் நாட்டில் எதையும் செய்யும் திறன் கொண்டவர்கள். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம்.
நாங்கள் மும்பைக்குச் செல்கிறோம், நாட்டின் அதிகபட்ச எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை என்னிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதவியிலும் விருப்பமில்லை. லோக்சபா தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடக்கலாம். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன, என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பாஜக ஏற்கனவே அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துள்ளது, இதனால் வேறு எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு "எதேச்சதிகார ஆட்சியை" எதிர்கொள்ளும்.

அவர்கள் (பாஜக) லோக்சபா தேர்தலை 2023 டிசம்பரில் அல்லது ஜனவரியில் நடத்தலாம் என்று நான் பயப்படுகிறேன். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு எதேச்சதிகார ஆட்சியை சந்திக்கும், என்று அவர் கூறியுள்ளார்.
மோடி திட்டம்: லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதன்படி இந்த வருடமே.. இறுதியில் தேர்தலை நடத்த அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் அதாவது மே மாதம் தேர்தலை நடத்த மோடி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்தியா கூட்டணி மேலும் வலிமையடையாமல் தடுக்க முடியும்.
2. இந்தியா கூட்டணி முறையாக திட்டங்களை வகுக்கும் முன் தேர்தலை நடத்தலாம்.
3. கள நிலவரம் எதிரணிக்கு ஆதரவாக மாறும் முன் தேர்தலை சந்திக்க முடியும் உள்ளிட்ட காரணங்களால் அமைச்சரவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டு வருகிறாராம்.












Click it and Unblock the Notifications