மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில்!
சென்னை : மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் பெரிதாக இல்லை. கொரோனா வீரியம் இல்லாததால் தற்போது கட்டுப்பாடு அவசியமில்லை. தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ள்ளார்.

இந்தியாவில் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமான ஒமிக்ரான் XXB 1.5 கொரோனா தொற்று வகை தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸானது முந்தைய வகை கொரோனவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சீனாவில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரானின் பிஎப்.7 அக்டோபரில் இந்தியாவில் பரவியது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கட்டுப்பாடுகள்
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 2019ல் கொரோனா பாதிப்பின்போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீண்டும் அதுபோன்ற சூழல் ஏற்படுமோ என்ற கலக்கம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது.

அமைச்சர்கள்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் ரூபாய் 2.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், பரந்தூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள், மானாமதி புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட ஒன்பது புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

மா.சுப்பிரமணியன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 9 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்கும் அரசு புற்றுநோய் மருத்துவமனை தற்போது தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளால் மிகப் பிரம்மாண்டமான சிறப்புமிக்க ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட உள்ளது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.

கட்டுப்பாடு
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் பெரிதாக இல்லை. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வீரியம் இல்லாததால் தற்போது கட்டுப்பாடு அவசியமில்லை, தேவைப்பட்டால் மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications