அண்ணாமலை குடும்பத்தை அட்டாக் பண்றாங்க.. டெல்லி அப்செட்டா? அமர் பிரசாத் ரெட்டி பரபர பதில்!

அண்ணாமலை வலுவான தலைவர். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது என்று அமர் பிரசாத் கேட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை கோபம் அடைந்தது சரிதான். நிர்மல் போனதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் அதிமுகவின் செயல்பாடுதான் தவறு. என்று பாஜக அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூட காட்டமாக பதில் அளித்து இருந்தார்.

அதில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து அமர் பிரசாத் ரெட்டி ஒன்இந்தியா யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், நான்தான் பிரச்னையை தூண்டிவிட்டது போல பேசுகிறார்கள். அதிமுக தோல்வி அடைந்த போது பாஜகதான் எங்கள் தோல்விக்கு காரணம் என்று ஒருவர் சொன்னாரே. அவர் பிரச்னையை தூண்டிவிடவில்லையா? சொல்லுங்கள். என்னை பொறுத்தவரை கட்சிதான் முக்கியம். எங்களுக்கு கட்சிதான் முக்கியம். நாங்கள் பெரிய கட்சி என்பதை 2024ல் நிரூபிப்போம். 2024ல் மீண்டும் பிரதமர் மோடிதான் ஜெயிப்பார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க எங்கே போனாலும் மக்கள் இதைத்தான் சொல்வார்கள். மோடி மீது பெரிய நம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி மீது பெரிய விருப்பம் உள்ளது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது. வந்த பின் கட்டணங்களை உயர்த்தியது. பாஜக அப்படி அல்ல. நாங்கள் கொள்கையை சொல்லி ஆட்சிக்கு வருவோம். எங்கள் கொள்கையை மக்கள் விரும்புகிறார்கள். அதனால் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இதற்கு முன் பாஜகவிற்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று தமிழ்நாடு மக்கள் உணருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் போனால் கண்டிப்பாக அவர்கள் அமைச்சர்கள் ஆவார்கள். தமிழர்கள் இங்கே வெற்றிபெறாத போதே நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்கள் அமைச்சர்கள் ஆகி உள்ளனர். முருகன் இணை அமைச்சர் ஆகி இருக்கிறார். அப்படி என்றால் இங்கே இருந்து எம்பிக்கள் வென்றால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

அண்ணாமலை கோபம்

அண்ணாமலை கோபம்

அண்ணாமலை கோபம் அடைந்தது சரிதான். நிர்மல் போனதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் அதிமுகவின் செயல்பாடுதான் தவறு. கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் கோபம் அடைந்து உள்ளோம். எங்கள் தலைவரை மோசமாக பேசிவிட்டு எப்படி கூட்டணிக்கு கட்சிக்கு போகலாம். அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு வருத்தம் கூட அதிமுக தரப்பில் தெரிவிக்கவில்லை. அதோடு அவர் இப்போதும் அண்ணாமலையை விமர்சனம் செய்து பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் இப்போது அதிமுக நிர்வாகி தானே. அவர் இப்போது எப்படி பாஜக தலைவரை விமர்சனம் செய்து பேசலாம்.

 ஏன் சண்டை

ஏன் சண்டை

அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. பக்கோடா வாங்கி தருவேன் என்றெல்லாம் பேச கூடாது. அண்ணாமலை வலுவான தலைவர். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. நான் எதோ அரசியலுக்கு புதிது என்கிறார்கள். நான் 2014ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். தமிழ்நாடு மீடியாவில் எவனாவது தவறாக பேசுவான். அந்த டுபாக்கூர் பேசுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் எப்போது கட்சிக்கு வந்தேன் என்று பாஜகவினருக்கு தெரியும். என் திருமணமே தமிழிசை அக்கா தலைமையில்தான் நடந்தது. அண்ணாமலையை மேலிடம் நம்புகிறது. அதனால்தான் அவருக்கு கர்நாடகாவில் பொறுப்பு கொடுத்துள்ளனர். அண்ணாமலை பேமலியை கூட அட்டாக் செய்கிறார்கள். இதுதான் திராவிட கட்சிகளா? நாங்கள் ஒருநாள் ஸ்டாலின் குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறோமா? சொல்லுங்கள் பார்க்கலாம். அண்ணாமலையை டெல்லி நம்புகிறது. அதனால்தான் அடுத்த மாநிலத்தில் கூட பொறுப்பு கொடுத்துள்ளனர், என்று அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+