எடப்பாடிக்கு வந்த நெருக்கடி.. ராத்திரி நேரத்தில் வந்த 5 பேர்.. ஒரே கண்டிஷன்.. உறைந்த அதிமுக
எடப்பாடி பழனிசாமி சென்னை மா.செ.க்களால் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது
சென்னை: பதவி வெறி ஒருவரை, எந்த எல்லையில் வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்திவிடும் என்ற கூற்று உண்மைதான் போல.. முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மிரட்டப்பட்டதாக கசிந்த செய்தி அதிமுக கூடாரத்தை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கின்றன.. இதில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.
இதற்காக தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.. இந்த நிலையில்தான் எடப்பாடியையே மிரட்டி பணிய வைத்திருக்கிறார்கள் சென்னை மாவட்ட செயலாளர்கள் என்ற ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
இன்றைய தினம் அமாவாசை என்பதால் வேட்பாளர்கள் பட்டியலை ரிலீஸ் செய்ய எடப்பாடியும் ஓபிஎஸ்ஸூம் தீர்மானித்திருந்த நிலையில், நேற்றிரவு சென்னை மாவட்ட செயலாளர்களால் மிரட்டப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அனைத்து முடிவுகளையும் மூத்த தலைவர்கள் எடுத்தாலும், சென்னையில் விருகைரவி, தி.நகர் சத்யா, பாலகாங்கா, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ் ஆகிய 5 மா.செ.க்கள் வைத்ததுதான் சட்டமாம்.

கடும்பாடி
சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய தென்சென்னை தேர்தல் பொறுப்பாளராக வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டார். வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டன. 139-வது வார்டில் போட்டியிட முன்னாள் கவுன்சிலரும், தென்சென்னை தெற்கு மாவட்ட துணைச் செயலாளருமான கடும்பாடியை தேர்வு செய்திருந்தார் வைத்தியலிங்கம்... கடும்பாடியை பொறுத்தவரை கடந்த காலங்களில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர். ஏரியாவாசிகளின் நன்மதிப்பை பெற்றவர்.. இப்போதும் மக்களின் ஆதரவில் சீட் கேட்டிருப்பவர்..

ஓபிஎஸ் - முனுசாமி
இவருக்குத்தான் வெற்றி என்ற சூழல் அந்த வட்டத்தில் இருக்கிறது என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்தே, எடப்பாடியும் ஓபிஎஸ்ஸூம், முனுசாமியும் சேர்ந்து கடும்பாடிக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்து, இறுதி பட்டியலில் அவரது பெயரையும் இணைத்தனர்... ஆனால், தென்சென்னையில் தன்னை தவிர மக்கள் செல்வாக்குடன் ஒருவரும் அதிமுகவில் வளரக்கூடாது என நினைக்கும் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, கடும்பாடிக்கு சீட் ஒதுக்கப்படுவதை அறிந்து டென்சனாகிவிட்டாராம்.

5 மா.செ.க்கள்
உடனே, தன்னுடைய நண்பர்களான தி.நகர் சத்யா, ராஜேஷ், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு ஆகிஅய் 4 மா.செ.க்களையும் அழைத்துக் கொண்டு நேற்றிரவு எடப்பாடியை சந்தித்துள்ளதாக தெரிகிறது.. கடும்பாடிக்கு சீட் கொடுக்கக் கூடாது என எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் விருகைரவி.. இதனை ஏற்காத எடப்பாடி, "உங்களுக்கும் கடும்பாடிக்கும் இருக்கும் தனிப்பட்ட விரோதங்களை தேர்தல் நேரத்தில் காட்டாதீர்கள்... ஜெயிக்கக் கூடியவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறோம்...

மிரட்டல்?
அந்த வகையில் கடும்பாடிக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. அவர்தான் ஜெயிப்பார் என ரிப்போர்ட்டுகளும் சொல்லுது. அவருக்கு ஏன் கொடுக்கக் கூடாது?" என்று எடப்பாடி கோபம் காட்டினாராம். அதற்கு விருகை ரவியோ, "அதெல்லாம் தெரியாதுங்க... கடும்பாடிக்கு சீட் கொடுக்கக் கூடாதுன்னா, கூடாதுதான். இங்கு நான் மாவட்ட செயலாளர். எனக்கு எதிராக நீங்க நடக்கக் கூடாது. எங்கள் முடிவைத்தான் நீங்கள் கேட்கணும். இல்லைன்னா, சென்னையில் அதிமுகவினர் யாருமே ஜெயிக்க மாட்டாங்க. நாங்க ஒத்துழைக்கவும் முடியாது" என்று மிரட்டும் தொணியில் விருகை ரவி பேசியுள்ளதாக தெரிகிறது..

கண்டிஷன்
அதற்கு மற்ற 4 மாசெக்களும் விருகைக்கு ஆதரவாக குரலை உயர்த்தியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் எடப்பாடியும் பதிலுக்கு எகிற, "எங்களுக்கு கட்டுப்படலைன்னா யாரையாவது வைத்து தேர்தலை நடத்திக்கிங்க" என்று அந்த 5 பேரும் ஒரே கண்டிஷனை போட, வேறு வழியில்லாமல் மாவட்ட செயலாளர்களின் மிரட்டலுக்கு பணிந்து, இறுதி பட்டியலில் இருந்து கடும்பாடி நீக்கப்பட்டிருக்கிறார்.. இது போன்றே பலரின் பெயர்கள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி மிரட்டப்பட்டிருக்கும் விவகாரம் அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸாகும் போதுதான் அதிமுகவில் வெளிப்படையாக இன்னும் பல களேபரங்கள் வெடிக்கும் என்கிறார்கள் அதிமுகவினர்... இதற்கிடையே, மாவட்ட செயலாளர்கள் மிரட்டியதில் கடும்பாடி நீக்கப்பட்டதையறிந்த முனுசாமி, வளர்மதி, ஜெயக்குமார், ஆதிராஜாராம் உள்ளிட்டவர்கள் எடப்பாடியை தொடர்பு கொண்டு, கடும்பாடியை நீக்கியிருக்கக் கூடாது என்று சொல்லி வருகிறார்களாம்.. இந்த தேர்தல் நடந்து முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்க போகிறதோ!?
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications