"மெசேஜ்" தந்த அமித்ஷா.. எகிறி அடிக்கும் பாஜக.. திடீர்னு ஸ்டாலின் பிளானுக்கு செக்?.. மேலிட பரபரப்பு
திமுகவுக்கு எரிச்சலை கிளப்பவே அண்ணாமலை இலங்கைக்கு செல்கிறாரா
சென்னை: திமுக, அதிமுக என்னவெல்லாம் செய்கிறதோ, அதே அரசியல் ரூட்டைதான் தமிழக பாஜகவும் தற்போது கையில் எடுத்துள்ளது..!
வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.. அதிமுகவை முந்திக் கொண்டு போகிற வேகத்தை பார்த்தால், தனித்து களமிறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்றும் நம்பப்படுகிறது.
அதற்கேற்றபடி, அதிமுகவின் உட்கட்சி பூசல்கள், தேமுதிகவின் வீழ்ச்சி, பாமகவின் சறுக்கல்கள் பாஜகவுக்கு தெம்பூட்டி கொண்டிருக்கின்றன.

மாநில தலைமை
இந்நிலையில், தமிழகத்தில் வரப்போகும் எம்பி தேர்தலில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மாநில தலைமை செயல்பட்டு வருகிறது.. இதற்காக, மக்களின் கவனத்தை கவரும் வகையில், தன் பாணி அரசியலை மாற்றி கொண்டுள்ளது.. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஒன்றையொன்றை தாக்கி கொள்வதும், மாநில அரசை கண்டித்து இன்னொரு கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் வழக்கம்.

அமித்ஷா
அதைதான் கடந்த 3 மாத காலமாகவே அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.. அதிமுக வாய் திறக்கிறதோ இல்லையோ, திமுகவை விமர்சித்து முதல் குரலை கொடுத்துவிடுவதுடன், கையோடு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து வருகிறார்.. இதன்மூலம் மக்களுக்கு தாங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டி கொள்வதுடன், திமுகவையும் டேமேஜ் செய்ய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஓரளவு உதவி கொண்டிருக்கின்றன.

திடீர் விசிட்
அந்த வரிசையில்தான் இலங்கை விசிட் என்ற திடீர் பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.. மே 1 ம் தேதி அதாவது நாளைக்கு இலங்கை செல்கிறார் அண்ணாமலை இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.. வழக்கமாக, இலங்கை தமிழர் விவகாரங்கள் என்றாலே திமுக, அதிமுக மட்டுமே இத்தனை காலமும் வாய் திறந்து வந்தது.. இலங்கை பிரச்சனையை அதிகமாக பேசியதும் திராவிட கட்சிகள் மட்டுமே.. பாஜக பொதுவாக இந்த விஷயங்களில் இதுவரை தலையிட்டது இல்லை.

ஸ்டிரைட்டாக செல்கிறார்
அப்பாவி மீனவர்கள் படுகொலை விஷயத்தில்கூட பெரிதாக செயல்பாடுகளை காட்டாத நிலையில், இந்த அணுகுமுறையைதான் பாஜக மாற்றி கொள்ள துவங்கி உள்ளது.. ஸ்டிரைட்டாகவே அண்ணாமலை இலங்கைக்கு போய், சிங்களர்களை சந்தித்து பேச போகிறாராம்.. இப்போது அங்கு நிலைமை மோசமாகி உள்ளதாலும், பொருளாதாரம் சீரழிந்து உள்ளதாலும் மக்கள் தவித்து போய் உள்ளனர்... வாழ்வாதாரம் இழந்து வரும் நிலையில், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அவைகளை கனிவுடன் கேட்டு நிறைவேற்றி தர முயல போவதாகவும் கூறப்படுகிறது.

நேரடி உதவிகள்
இதுகுறித்து நேற்றே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இலங்கைக்கு இந்தியா நிறைய உதவிகளை செய்து வருகிறது... பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இந்த உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன... அங்கிருக்கும் மக்களின் மீள் வாழ்க்கைக்காக, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அதற்கு நன்றி சொல்லும் விதமாக, அங்கிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், தங்களின் தொழிலாளர் காங்கிரஸ் வாயிலாக, மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வரும்படி, மோடியின் பிரதிநிதியாக என்னை அழைத்துள்ளனர்.

தலைவர்கள்
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.. அதனால்தான் நான் இலங்கை செல்கிறேன்.. அங்கே சென்று, இந்திய அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அந்த நாட்டு தலைவர்களின் எதிர்பார்ப்பையும் நேரிலேயே சென்று தெரிந்து கொள்ள வரஉள்ளேன்.. அதேபோல, பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ள பயனாளிகளையும் சந்தித்து பேச போகிறேன் என்றார்.

நன்மதிப்பு
அண்ணாமலை சொல்லி உள்ள விஷயங்கள் அனைத்தும் நடந்தால், நிச்சயம் தமிழக பாஜகவுக்கு அது நல்ல பெயரையும், மதிப்பையும் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளவர்கள் சொல்லும் கருத்துக்கள், வரப்போகும் எம்பி தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கும் அடித்தளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அதேசமயம், திமுகவுக்குதான் இது சற்று எரிச்சலை தந்துள்ளதாக தெரிகிறது..

ஸ்டாலின் பேச்சு
காரணம், நேற்றுதான் பேரவையில், இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக பேசினார்.. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளதால், உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும், ஆனால், இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை... இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்" என்று ஸ்டாலின் பேசியிருந்தது பல கட்சிகளின் கவனத்தை திருப்பியது.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் அப்படி சொல்லி வரும் நிலையில், திடுதிப்பென்று அண்ணாமலை இலங்கைக்கு கிளம்பி நேரடியாகவே சென்றுள்ளது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, திமுகதான் நம்பர் ஒன் எதிரி என்று அமித்ஷா அண்ணாமலையிடம் சொன்னதாக செய்திகள் 2 நாட்களுக்கு முன்பு பரபரத்தன.. ஒருவேளை, அதை மனதில் வைத்துதான் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது அல்லது திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்று அடிக்கடி அண்ணாமலை சொல்வாரே, அதனால்தான் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? தெரியவில்லை.. எப்படியோ, இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைத்தால் சரிதான்..!
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications