நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்?.. குடும்பத்தகராறில் விபரீதத்தை செய்தாரா?
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா இன்று காலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஹேம்நாத் என்பவருடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நீ எதிர்த்து போராடியிருக்கணும் சித்ரா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜோடியாக நடித்த குமரன் உருக்கம்

சித்ரா தற்கொலை
மிகவும் ஜாலியான தைரியமான பெண்ணான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை ரசிகர்களும் சக நடிகர்களும் நண்பர்களும் நம்பவில்லை. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் சித்ராவின் தாயாருக்கும் ஹேம்நாத்திற்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

ஹோட்டல்
இதனால் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் இருவரும் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர்களுக்கு பதிவு திருமணம் எல்லாம் நடைபெறவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

நண்பர்கள்
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு விஜே சித்ரா சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என அவரிடம் ஹேம்நாத் குடும்பத்தினர் கூறினராம். அதுபோல் குமரனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இந்த விஷயங்களை சித்ரா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

வற்புறுத்தலா
இதனால் இந்த திருமணத்தை நிறுத்த சித்ரா முடிவு செய்திருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவை ஹேம்நாத் குடும்பத்தினர் சந்தித்து மேற்கண்ட கண்டிஷன்களை போட்டு அவரிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனமுடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.